ஞாயிறு, 24 அக்டோபர், 2021

மனைவியை 18 லட்சத்திற்கு விற்ற 17 வயது கணவன்! செல்போன் வாங்குவதற்காகவாம்.. ராஜஸ்தானில்

Odisha teen sells wife to 55-year-old Rajasthan man

 .tamilmirror.lk  : மனைவியை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ஆடம்பர கையடக்க அலைபேசியை வாங்கி, ஆடம்பரமாக வாழ்ந்த கணவனை பொலிஸார்  கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த சம்வமொன்று ராஜஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.
பின்னர்,இத்தம்பதியினர் ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தானிலுள்ள  செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு சிறுவன் (கணவன்) தனது மனைவியை ரூ.18 இலட்சத்துக்கு பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது நபருக்கு விற்பனை செய்துள்ளான்.  click here teen-sells-wife


பின்னர்,அதில் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக வாழ்ந்துசெலவு செய்ததோடு, ஒரு அலைபேசியையும் வாங்கிய பின்னர், கணவன் தனது சொந்த ஊர் திரும்பி உள்ளான்.
ஊர் திரும்பிய கணவனிடம் மனைவி எங்கே எனக் குடும்பத்தினர் கேட்டபோது, ‘எனது மனைவி என்னை  விட்டு விட்டு ஓடி விட்டதாக’ கணவன் கூறியுள்ளான்.

சந்தேகமடைந்த சிறுமியின் (மனைவியின்) குடும்பத்தினர் பொலிஸில் புகார் செய்தனர். பொலிஸார்  நடத்திய விசாரணையில் அவர் மனைவியை விற்றுள்ளமை  தெரியவந்தது.

பாலங்கீரிலிருந்து ராஜஸ்தானுக்கு அந்த சிறுமியை மீட்க சென்ற பொலிஸ் குழுவை அக் கிராமவாசிகள் எதிர்த்தனர்.

பணம் கொடுத்து சிறுமியை வாங்கியதால் அவரை அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.தொடர்ந்து அவர்களிடம் பொலிஸார் சமாதானம் பேசி சிறுமியை மீட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக