வியாழன், 9 செப்டம்பர், 2021

தென் மாவட்ட அமைச்சர் பி.ஏ.க்களுக்கு தர்ம அடி.. சீனியர் கோதாவில் அடாவடி மிரட்டல்.

 Mathivanan Maran -   Oneindia Tamil :  சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் விரைவில் இருக்கக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். அமைச்சர்கள் சிலரது செயல்பாடுகளில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதால் அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தலைமை செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சரவை மாற்றம் என்பது அடிக்கடி நிகழக் கூடியது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் என்பதற்காக சீனியராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட அமைச்சர்களை கூண்டோடு தூக்கியடித்த வரலாறும் உண்டு.
அதே பாணியைத்தான் ஜெயலலிதாவும் பின்பற்றினார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு எப்போதும் திக் திக் மனநிலைதான். விடிந்து எழுந்தால் பதவி இருக்குமா? இல்லையா? என்பது தெரியாத திரிசங்கு நிலையில்தான் இருந்தனர் அந்த நாள் அமைச்சர்கள்.
அதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் blank blank அதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த துறைக்கு யார் அமைச்சர் என்பதே தெரியாத அளவுக்குதான் நிலைமை இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது அமைச்சரவை மாற்றம் என்பது அரிதான ஒன்றாகவே இருந்தது. அதேநேரத்தில் கல்வி துறை என்றால் அன்பழகன், பொதுப்பணித்துறை என்றால் துரைமுருகன், பத்திரப் பதிவு துறை என்றால் ஐ.பெரியசாமி என அமைச்சர்கள் தங்களது துறைகளில் முத்திரை பதித்தவர்களாகவும் விளங்கினர். தற்ப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதே பாணியை பின்பற்றித்தான் அமைச்சரவையை அமைத்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை இந்த 4 மாத காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை, இந்திய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

பெரும்பாலான அமைச்சர்களும் முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுக ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாகவே செயல்பட்டும் வருகின்றனர். பொதுவாக அதாவது மேம்போக்காக பார்த்தால் மு.க.ஸ்டாலின் அமைச்சரவை சிறப்பான அமைச்சரவை என்றுதான் தெரிகிறது.

இருந்தபோதும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள்தான் கோட்டை வட்டாரங்களிலேயே அசூயையாகப் பார்க்கப்படுகிறது. அமைச்சர்களின் செயல்பாடுகள் அமைச்சர்களின் செயல்பாடுகள் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் தனது பி.ஏ.க்களை கோட்டையிலேயே கொத்து பரோட்டா போடும் அளவுக்கு வெளுத்து இருக்கிறார். சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில் உயிர் தப்பினால் போதும் என அந்த பி.ஏ.க்கள் அலறி அடித்து ஓடிய சம்பவமும் நடந்திருக்கிறது.

வடமாவட்டத்தைச் சேர்ந்த புது அமைச்சர் ஒருவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர் துறையில் இருந்த ஊழல்களை அதிரவைத்து பேசுகிறாரே தவிர, அந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகளை இன்னமும் பக்கத்தில்தான் வைத்து கொண்டிருக்கிறார். ஊழல் என பேசும்போதும் அந்த அதிகாரிகள் எந்த சலனமும் இல்லாமல் அமைச்சர் கூடவே இருக்கிறார்கள் என்பதும் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.

விரைவில் அமைச்சரவை மாற்றம்? இன்னொரு ரொம்ப சீனியரான அமைச்சர், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய விஷயங்களை அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. உன் வேலையைப் பாரு என புது அமைச்சர்களை பாடாய் படுத்துகிறாராம். இத்தனை தகவல்கள் நமக்கு கிடைத்தது போலவே முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம். இந்த அமைச்சர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முதல்வர் தரப்பு ஆலோசிக்கிறதாம். அனேகமாக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் அமைச்சரவை மாற்றம் உறுதியாக இருக்கும் என்கின்றன நமக்கு கிடைக்கும் தகவல்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக