திங்கள், 6 செப்டம்பர், 2021

உலகின் மிக உயர்ந்த திரையரங்கம் – லடாக்கில் அறிமுகம் !

தினத்தந்தி :  லே-லடாக் யூனியன் பிரதேசத்தில் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சினிமா தியேட்டர், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள திரை அரங்கம் என்ற பெருமையை பெறுகிறது.
இது உலகின் மிக உயர்ந்த திரையரங்கமாக காணப்படுகின்றது. மேலும், பெரும்பாலான தொலைதூர பகுதிகளுக்கு சினிமா பார்க்கும் அனுபவத்தை கொண்டு வரவே  லடாக்கில் உள்ள லேவின் பல்டன் பகுதியில் 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் இந்த மொபைல் திரையரங்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திரையரங்கு தொடர்பாக தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த நாடகக் கலைஞரான மேபம் ஓட்சல் கூறியுள்ளதாவது, ‘இது மலிவு விலையில் டிக்கெட்டுகளை வழங்குகிறது. மற்றும் பல வசதிகளைக் கொண்டுள்ளது.
அத்துடன் இருக்கை அமைப்பும் நன்றாக உள்ளது. இது இங்குள்ள மக்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது கலை மற்றும் சினிமா உலகிற்கு ஒரு கதவைத் திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை அமைப்பாளர் சுஷில் தெரிவித்துள்ளதாவது ‘லேவில் இதுபோன்ற நான்கு திரையரங்குகள் நிறுவப்படும்.

இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கு திரைப்பட அனுபவத்தை கொண்டு வருவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடியும்.

திரையரங்கு 28 டிகிரி செல்சியஸில் செயல்படக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட குறும்படம், லடக்கின் சாங்பா நாடோடிகளை அடிப்படையாகக் கொண்ட செகூல் ஆகியன வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக