ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!

 Rayar - Oneindia Tamil : சென்னை: 10-ம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறந்த எஸ்யூவி சொந்தமாக வைத்திருக்க உங்களுக்கோர் வாய்ப்பு.. இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழ்நாட்டில் கொரோனா தற்போது கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும், ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா படுத்தியபாடை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அந்த நேரத்தில் தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின.
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டன. நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். அதன்பின்னர் நிலைமை ஓரளவு சீரடைந்தது.
நாளை நீட் தேர்வு நடக்கும் நிலையில்..நாளை மறுதினம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்நாளை நீட் தேர்வு நடக்கும் நிலையில்..நாளை மறுதினம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்

கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. மிக முக்கியமான 10-ம் வகுப்பு தேர்வுகள், 12-ம் வகுப்பு தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ' செப்டம்பர் 2021-ல் நடைபெற உள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவி வரும் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுவதுவதில் இருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.


ஏற்கனவே 12-ம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக