வியாழன், 16 செப்டம்பர், 2021

தமிழியை தமிழ் பிராமி என்று கூறும் மோசடி- ஒரு வரலாற்று மோசடி..!!!

Ancient Tamil Civilization - Tamil Script found in Oman Discovery has  opened new chapter in understanding maritime trade of Indian Ocean  countries, say historians A Tamil script inscribed on a potsherd, which

Sundar P   :  அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி..!!!
28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை.
தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”.
அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.
இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.
மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.
அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை.! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!
இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.
தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா?
சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.
பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை?
சிந்திக்க வேண்டிய விசயம்!
 உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்!
சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது.
இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது!
கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.
அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.
அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை?
ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!
இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?
இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?
(நலன் கருதி இந்த இடத்தில சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது., இணையத்தில் படித்து தெரிந்துகொள்ளவும்)
 உண்மையில் பல சமஸ்கிருத புராண நூல்களிலேயே – மொழிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. அதாவது கி.மு 3-வது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது.
அவையாவன.
1.பாம்பி
2.யவனானி
3.தோசபுரியா
4.கரோத்தி
5.புக்கரசரியா
6.போகவையா
7.பகாரியா
8.உயமித்ரகரியா
9.அக்கரபுட்டியா
10.தவனானியா
11.கிணிகையா
12.அங்காலிவி
13.கணிதாவிலி
14.காந்தவ்யவிலி
15.ஆடம்சாலிவி
16.மகாசனி
17.தமிழி
18.பொலிம்னி
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து வடிவப் பட்டியலில் தமிழி இருப்பது காண்க. தமிழ்தானே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவம்? அப்படியானால் அதுதானே பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்க வேண்டும்? ஏன் அது 17 ஆவதாகக் காட்டப்பட்டிருக்கிறது? காரணம், இப்பட்டியலை வடநாட்டினர் தயாரித்தனர். எனவே அவர்கள் தென்னாட்டுத் தமிழை இறுதியில் வைத்துவிட்டனர்.
சரி, கி.மு 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்று கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோம். தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்பதுதானே சரியாக இருக்கமுடியும்! அதென்ன பிராமி?
மேற்கண்ட அசோகன் காலமான கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கூறப்பட்ட பட்டியலில் எங்காவது பிராமி என்று ஓர் எழுத்து வடிவம் வந்துள்ளதா?
இல்லையே.!
அப்படியானால் தமிழோடு பிராமி என்று ஒட்டு சேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வடமொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
இரண்டு விடயங்கள் குறித்து அலசவேண்டும்.
1. சமஸ்க்ருததிற்கு எழுத்து வடிவம் கொடுத்தது, முதலாம் ருத்ரதாமன் என்ற சகா வம்சத்து மன்னன் ஆவான். இவன் கி.பி.150 ஆண்டைச் சேர்ந்தவன். சகா வம்சத்தினர், ஈரான் நாட்டைச் சேர்ந்த சைத்திய பழங்குடி இனத்தை சார்ந்தவர் ஆவர். வட பிரம்மி எழுத்துக்களைக் கொண்டு சம்ச்க்ருததிற்கு எழுத்துக்களை உருவாக்கினான். இந்த எழுத்துக்களுக்கு 500 - 600 ஆணடுகளுக்கு முன்னமே தமிழில் பிரம்மி எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன
2. அசோகன் தென்னகம் நோக்கி வந்தபோது ஆந்திராவில் பட்டிப்ரோலு என்ற இடத்தில, ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் பிரம்மி என அழைக்கப்பட்டது. இந்த எழுத்து வடிவத்தில் தமிழ் மொழிக்கென, உள்ள சிறப்பு எழுத்துக்களான ழ ள, ற, ண போன்ற எழுத்துக்களும் அடக்கம். இன்று வரை ஆய்வாளர்கள், அசோகனே பிரம்மி எழுத்துக்களின் தந்தை என்று நம்பி வந்தனர்
மேலும், தமிழ் நாட்டில் இதுகாறும், கிடைத்துள்ள, ஓட்டுசில்லுகள் நீங்கலாக பல சங்க காலக் கல்வெட்டுகள் சமண மதம் சார்ந்தே கிடைத்துள்ளன.. அதனால் இந்த எழுத்துக்களை தமிழ் பிரம்மி என அழைத்தனர். உண்மையில் இந்த எழுத்துக்கள் தமிழி என்றே ஆதித் தமிழர் அழைத்தனர்.
இது பிரம்மி வந்த வரலாறு.
அசோகனின் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு. தமிழில் கிடைத்த மிகவும் பழமையான கல்வெட்டாக. தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனின், சமணர்க்கு அவன் அளித்த சமணப் பாழிகளை குறிக்கும் கல்வெட்டை, கி.மு இரண்டாம் நூற்றாண்டு என வகைப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலைப்பாட்டால், பல ஆண்டுகளாக, தமிழி எழுத்துக்கள், அசோகனின் வட பிரம்மி எழுக்களில் இருந்து சங்கமம் ஆனவை என நம்பப்பட்டது.
எனினும் அனமைக்காலமாக, ஈழத்தில் அனுராதபுரம், தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் கிடைத்த ஓட்டுசில்லுகளில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் குறைந்த பட்சம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறுதி இடப்பட்டுள்ளது.
அதிலும், பொருந்தலில் (பழனிக்கு அருகில் உள்ளது - மயிலுக்குப் போர்வை அளித்த பேகன் ஆண்ட பூமி) கிடைத்துள்ள தாழியில் உள்ள அரிசிகள் கார்பன் அகவைக்கு உட்படுத்தப்பட்டு கி.மு ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக