திங்கள், 13 செப்டம்பர், 2021

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு... விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு

 மாலைமலர் : சட்டமன்ற கூட்டம் நடந்ததால் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப் போனது.
சென்னை:   தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை கூட்டம் நடந்ததால் தேர்தல் தேதி அறிவிப்பும் தள்ளிப் போனது.
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். வரும் 15 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக