புதன், 11 ஆகஸ்ட், 2021

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்

மாலைமலர் : அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்.
சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டாக்டர் ஆர்.வேல்ராஜ், துணைவேந்தராக 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்  என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக