வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

பாரிஸில் தாயும் மகளும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை.. மேலதிக விபரங்கள்

May be an image of 2 people and people standing

Thambirajah Jeyabalan  :  பாரிஸில் யாழ் உரும்பராயை பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை!
ஓகஸ்ட் 10 இல் பரிஸ் 95 பிரிவில் யாழ் உருப்பரையை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இக்கொலை தொடர்பாக விசாரணைகளை பொத்துசான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏனைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவ தினம் அன்று காலை 10 மணிக்கு வேலையால் வந்த கணவர் தனது மனைவியையும் மகளையும் உயிரிழந்த நிலையில் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கி உள்ளார்.


கொல்லப்பட்டவர்கள் யாழ் உரும்பராயைச் சேர்ந்தவர்கள் என்றும் உரும்பராய் சந்திரோதயா வித்தியாசலையை ஒட்டிச் செல்லும் வீதியில் வாழ்ந்தவர்கள் என்றும் உரும்பராயைச் சேர்ந்த லண்டனின் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்கள் விஜயசிறி இராசதுரை (51) டிலக்சனா இராசதுரை (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாரிஸில் கடந்த ஆண்டு மனநிலை பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. அச்சம்பவத்திலேயே முதன் முதலாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தமிழ் சூழலில்இ வளர்ந்த ஒருவரையும் கொலை செய்து பிள்ளைகளையும் கொலை செய்திருந்தார்.
ஏனைய சம்பவங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய் தான் தன் குழந்ழதைகளைப் பாதுகாக்கிறேன் என்ற குழுப்பநிலையில் தங்கள் குழந்தைகளைக் கொன்று தாங்களும் தற்கொலை செய்து இருந்தனர். இவ்வாறான ஐந்துவரையான சம்பவங்கள் கனடாஇ லண்டன்இ அவுஸ்திரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்குள் தமிழர்கள் மத்தியில் நடைபெற்றது. லண்டனில் தந்தையொருவர் தன் குழந்தைகளைப் படுகொலை செய்து தானும் தற்கொலை செய்தமை தெரிந்ததே.
விஜயசிறிஇ டிலக்சனாவின் மரணம் படுகொலையாகவே சந்தேகிக்கப்படுகின்றது. ஆனால் எதுவும் இதுவரை உறுத்திப்படுத்தப்படவில்லை.
டிலக்சனா சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ரிக்ரொக் கில் பிரபல்யம் பெற்றிருந்தவர் எனத் தெரியவருகின்றது. மேலும் இவருக்கு நட்பாக இருந்த ஒருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. டிலக்சனாவின் நட்பு தொடர்பாக பிரச்சினைகள் வீட்டில் இருந்ததாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த காலை டிலக்சனாவின் சகோதரரும் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரே கொலை இடம்பெற்றுள்ளது. கொலையாளி(கள்) பலவந்தமாக வீட்டில் நுழையவில்லை கதவு திறக்கப்பட்டே உள்நுழைந்துள்ளனர். இவை எதுவுமே இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அக்குடும்பத்தைச் சேர்ந்த கணவரும் தந்தையுமான இராசதுரையும் மகனும் சகோதரருமானவரும் மருத்துவசேவையினரால் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Source: https://thesamnet.co.uk/?p=76297

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக