திங்கள், 2 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் படத்தை குடியரசு தலைவர் திறந்து வைத்தார்

 தினத்தந்தி :சென்னை  தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று (02.08.2021) மதியம் குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் சென்னை வந்டைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை  கவர்னர் பன்வாரிலால் புரோகித்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சென்னை வந்ததும் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார் ஜனாதிபதி . மாலை 5 மணிக்கு சட்டமன்றத்தில் விழா துவங்குகிறது. விழாவில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தலைமைச் செயலகம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் வாழை மர தோரணம், வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

தினமலர் : சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.



தமிழ்நாடு சட்டமன்ற  நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர்  உருவப்படத் திறப்பு விழா, இன்று (ஆக., 2) புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். விழாவையொட்டி தலைமை செயலக வளாகம் கமாண்டோ படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக