வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை.. பக்தர்கள் உற்சாக வரவேற்பு

news 18 tamil : தமிழ்நாட்டில்  உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழ்நாடு க அரசு அறிவித்திருந்தது.  அந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 ஆலயங்களில் இன்று "அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சை பெரிய கோவிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கடந்த காலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக