செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த ஐஎஸ், லஷ்கர் தீவிரவாதிகள் ஐ நா எச்சரித்தது போலவே நிலைமை மோசமாகிறது

 Shyamsundar   -   Oneindia Tamil  :   காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐஎஸ், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் முகாமிட தொடங்கி உள்ளனர். தாலிபான்களின் வெற்றியை பயன்படுத்தி இந்த அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் முகாம் போட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் எது நடக்க கூடாது என்று அமெரிக்கா அஞ்சியதோ அது மீண்டும் நடந்துவிட்டது..
 20 வருடமாக போர் நடத்தியது எதற்கோ அது மீண்டும் நடந்துவிட்டது..
நேற்று யுஎன்எஸ்சி கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ் எதை பற்றி எச்சரிக்கை விடுத்து இருந்தாரோ அது விடிவதற்குள் ஆப்கானிஸ்தானில் நடந்தேறிவிட்டது...
தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவிட கூடாது, ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை வளரவிட்டுவிட கூடாது என்று ஆண்டோனியோ குட்டேரஸ் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
ஆனால் அவர் எச்சரிக்கை விட்டு 24 மணி நேரம் ஆவதற்கு முன்பே ஆப்கானிஸ்தானுக்குள் பல்வேறு சர்வதேச தீவிரவாத அமைப்புகள் புகுந்து முகாம் அமைத்துள்ளன.

முக்கியமாக காபூலில் தற்போது பல்வேறு இடங்களில் பயங்கரமான தீவிரவாத அமைப்புகள் தனித்தனியாக முகாமிட்டு அடுத்தகட்ட பணிகளுக்காக தயாராகிக்கொண்டு இருக்கின்றன.
ஆப்கன் விவகாரம்.. தாலிபான் விஷயத்தில் மோடி அரசின் நிலைப்பாடு என்ன?

வரிசை கட்டி நிற்கும் சவால்கள் என்ன நடந்தது? blank blank blank blank என்ன நடந்தது? ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்போது ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், பிரபல ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், லஷ்கர் இ தொய்ப்பா தீவிரவாதிகள் தற்போது முகாமிட தொடங்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாவே இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி வந்த நிலையில் தற்போது இவர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது.
அதிலும் கடந்த 48 மணி நேரத்தில் இவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தானுக்குள் முகாமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
தாலிபான்களின் வெற்றியை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானுக்குள் இவர்கள் நுழைந்துள்ளனர்.
காபூலில் வெவ்வேறு இடங்களில் இருந்து இவர் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த தீவிரவாத அமைப்புகளின் வருகை ஒரு பக்கம் உலக நாடுகளுக்கு சிக்கலையும் ஏற்படுத்தும், இன்னொரு பக்கம் தாலிபான்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும். எப்படி என்று பார்க்கலாம்.. அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாலிபான் அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் எந்த விதமான மோதலில் ஈடுபட கூடாது. நட்பு நாடுகளை தாக்க கூடாது. அதேபோல் தீவிரவாத இயக்கங்கள் எதற்கும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடம் கொடுக்க கூடாதது.

இந்த நிலையில்தான் தற்போது ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளின் வருகையால் தாலிபான்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. அமெரிக்க ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்த தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் முகாம் போட்டு வருவதால் தாலிபான்கள் கொஞ்சம் கலக்கத்தில் உள்ளது.
தீவிரவாத அமைப்புகளின் வருகை தங்களுக்கு எதிராக திரும்பி விடுமோ என்று தாலிபான் அஞ்சுகிறது.

தாலிபான் அமைப்பு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தீவிரவாதிகள் என்ற பெயரில் இருந்து மாறி போராளி அதன்பின் அரசியல் கட்சி என்ற பெயரை பெறுவதற்காக முயன்று வருகிறது. ஹமாஸ் போல தாங்களும் அரசியல் கட்சியாக மாறும் முயற்சியில் தாலிபான்கள் செயலாற்றி வருகிறது.
இப்படிப்பட்ட நேரத்தில் காபூலில் தீவிரவாத இயக்கங்கள் முகாம் போடுவதும், நாட்டுக்குள் தீவிரவாதிகள் நுழைவதும் தாலிபான்களின் திட்டத்திற்கு வேட்டு வைக்கலாம்.
அதோடு தாலிபான்களுக்கு சர்வதேச ஆதரவுகள் கிடைக்காமல் போவதற்கும் கூட நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இதனால் தாலிபான் தலைவர்கள் இப்போதே தீவிரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்களை வெளியேற்றும் விதமாக தாலிபான் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஐஎஸ் உள்ளட்ட அமைப்புகளை உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி இவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதோடு இது தாலிபான்களுக்கும் சில தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாத அமைப்புகளை தாலிபான் வெளியேற்ற நினைத்தால் ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் சில தாலிபான்களுக்கே எதிராக திரும்பும் ஆபத்தும் உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மற்ற தீவிரவாத இயக்கங்கள் vs தாலிபான் என்ற நிலை வரலாம். நாட்டை விட்டு தப்பிக்க அலைமோதும் கூட்டம்.. Afghanistan விமான நிலையத்தில் பரபரப்பு தாலிபான் வாய்ப்பு தாலிபான் வாய்ப்பு தாலிபானுக்கு தற்போது இரண்டே வாய்ப்புதான் உள்ளது.
 ஒன்று ஆப்கானிஸ்தானுக்குள் தீவிரவாத அமைப்புகளை அனுமதித்து உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிப்பது. இல்லையென்றால் தீவிரவாத அமைப்புகளை வெளியேற்றி அவர்களின் எதிர்ப்பை சம்பாதிப்பது. இரண்டுமே தாலிபானுக்கு ஒரு வகையில் சிக்கலை ஏற்படுத்த கூடியதுதான்.

பெரும்பாலும் ஆப்கானில் உள்ள ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை தாலிபான் "தற்காலிகமாக" வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அமைப்புகள் இப்படி முகாம் போடுவது சர்வதேச பாதுகாப்பிற்கும் சிக்கலை ஏற்படுத்த கூடியது ஆகும். ஏனென்றால் தாலிபான் ஒருவேளை இவர்களை கட்டுப்படுத்த தவறினால் இந்த அமைப்புகள் எளிதாக வளர்ந்துவிடும். ஒரு நாட்டை புகலிடமாக வைத்து வேகமாக வளர இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு வழி ஏற்படும். இதன் மூலம் எளிதாக அவர்கள் பிற நாட்டை தாக்க முடியும்.
அதெல்லாம் போக ஆசிய கண்டத்தில் தாலிபான்களின் குட் புக்கில் இல்லாத ஒரே நாடான இந்தியாவிற்கும் இது சிக்கலாக முடியும். புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழுவும் இப்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது.

தாலிபான் வெற்றியை பயன்படுத்தி இந்த அமைப்பும் காபூலில் முகாம் அமைத்துள்ளது. இப்படி இருக்கும் போது அது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும். இதனால் சர்வதேச அரசியலில் இனி என்ன நடக்கும், இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக தாலிபான்கள் எப்படி காய் நகர்த்தும் என்ற கடும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தீவிரவாத அமைப்புகளை ஆப்கான் அரசு என்ற முறையில் தாலிபான் ஒடுக்குமா அல்லது நண்பர்கள் என்ற முறையில் வளர விடுமா என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக