சனி, 14 ஆகஸ்ட், 2021

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு.. மீண்டும் தூசுதட்டப்படுகிறது . உதகை கோர்டில் போலீஸ் புது மனு

  Velmurugan P - e Oneindia Tamil  :   ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றிய விவாதங்கள் ஓய்ந்திருந்த நிலையில்,
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மீண்டும் அந்த வழக்கு தூசுதட்டப்படுகிறது ,
தொடர்ந்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக உதவை நீதிமன்றத்தில் காவல்துறை மனு அளித்துள்ளது.
அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கொடநாடு மர்மங்கள் தொடர்பாக வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் விரைவில் வரும் என்று கூறி புயலைக் கிளப்பிஇருந்தார்.
இந்த சூழலில் தொடர்ந்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால்,
கூடுதல் விசாரணை கோரி உதகை நீதிமன்றத்தில் காவல்துறை புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சரும்அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவுக்கு நீலகிரி மலையில் கொடநாடு எஸ்டேட் சொந்தமாக இருந்தது.
அவர் உயிருடன் இருந்த வரை அங்கு தான் அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பார் .


 அவர் மறைவுக்குப் பிறகு அதாவது 2016ம் ஆண்டுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது,

2017ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது கொடநாடு எஸ்டேட்டில் பல மர்மமான மரணங்கள், கொள்ளை சம்பவங்கள் விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தது. கொடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டில் பாதுகாப்புக் காவலர் ஓம் பகதூர் வாயில் துணி அடைக்கப்பட்டு மர்மமாக இறந்து கிடந்தார்.
பின்னர், அவருடன் வேலை செய்த கிருஷ்ண பகதூருக்கும் கடுமையான காயங்கள் கண்டெடுக்கப்பட்டார். இது ஒரு கொள்ளை முயற்சி என்று போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால் என்னென்ன கொள்ளை அடிக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. ஏனெனில் ஜெயலலிதா அப்போது உயிருடன் இல்லை. சசிகலாவும் சிறையில் இருந்தார்.

இந்த சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு, கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்த 24 வயது இளைஞர் தினேஷ்குமார் தனது வீட்டில் தற்கொலை செய்ததால் பரபரப்பு அதிகரித்தது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக கே.வி.சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில் , கனகராஜ் ஒரு கார் விபத்தில் இறந்தார். சயானும் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஆனால், அந்த விபத்தில் அவருடைய மகளும் மனைவியும் உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போலீசாரால் மீட்க முடியவில்லை.

கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சயான் பேச்சு சயான் பேச்சு இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் வாலையார் மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில்,
 இந்த சம்பவத்தில் அதிகாரத்தில் உள்ள உயர் மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் உண்மையை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை என்று கடந்த ஆண்டு கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கடந்த ஜூலை 20ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் "கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டதாக மிகவும் உயர்மட்டத்தில் உள்ள வட்டாரங்கள் கூறுகின்றன...
 சில விறுவிறுப்பான ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் உண்மைகளுக்காக காத்திருங்கள்..." என்றார். மேலும் "கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்.... ஆ
தாரங்களுடன் அனைத்தர்கும் அதிர வைக்கும் விடைகள்... Game Over Bro..." என்று கூறி அதிரவைத்தார்.
ஊட்டி போலீஸ் மனு ஊட்டி போலீஸ் மனு இந்த சூழலில் தொடர்ந்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக கூடுதல் விசாரணை கோரி உதகை நீதிமன்றத்தில் காவல்துறை புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் பல உண்மைகள் வெளியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக