புதன், 4 ஆகஸ்ட், 2021

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான பயங்கர தாக்குதல் :

 Thirumeni Saravanan  :  சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான பயங்கர தாக்குதல் :
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய் (03-08-2021 ) மாலை சுமார் 6 45 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் பெரிய பட்டாக்கத்தி உடன் உள்ளே நுழைந்துள்ளார்.
அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறி அலுவலகத்தின் அலங்கார கண்ணாடிகள் உள்ளிட்ட அனைத்தையும் கையில் இருந்த பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கி உள்ளார்.
அங்கு பணியில் இருந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
*சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.


கையில் வாளும் கேடயமும் கொண்டு அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய நபருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை முழுமையாக விசாரித்து தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்
தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
*பத்திரிகையாளர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை ஊடக அலுவலகங்கள் பாதுகாப்பு சட்டத்தை அரசு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்கள் பத்திரிகை ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.*
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
*சென்னை பத்திரிகையாளர் மன்றம்*
சென்னை
03-08-2021
See Less

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக