சனி, 14 ஆகஸ்ட், 2021

மகளுக்கு பாலியல் தொந்தரவு- போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது. திருச்சி மருத்துவர்...

 நக்கீரன் - மகேஷ்  :  திருச்சி மாவட்டம், கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிப்புரிந்து வருகிறார்.
இவரது மனைவியும் மருத்துவர் ஆவார். இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ரமேஷின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னுடைய பெண் குழந்தைக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர் ரமேஷின் மனைவி, தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டில் உள்ள அம்மா வீட்டிற்கு  சென்றுவிட்டார்.
அங்கு சிறுமியிடம் விசாரித்த போது, இது குறித்த அவலத்தை அவர் தனது தாயிடம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாய் இது குறித்து சைல்டு லைனை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.


 சைல்டு லைன் அலுவலர்கள் இது குறித்து விசாரணை நடத்தியதோடு, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாயாரை புகார் அளிக்க செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மருத்துவர் ரமேஷ் தன்னுடைய குழந்தையிடம் தவறுதலாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர் ரமேஷை காவல்துறையினர் போக்‌சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக