ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

கோவை ஹோட்டலில் அழுகிய நிலையில் கேரளா பெண் சடலம்

woman dead: தனியார் ஹோட்டலில் அழுகிய நிலையில் பெண் சடலம்: கோவையில்  அதிர்ச்சி! - woman dead body in hotel at coimbatore | Samayam Tamil

  Manikandaprabu S | Samayam Tamil : கோவை தனியார் ஹோட்டலில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அங்கு ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் அறையை திறந்து பார்த்த போது, பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அதே அறையில் ஒருவர் பலத்த காயங்களோடு உயிருடன் இருந்துள்ளார்.
இது குறித்து, உடனடியாக ஹோட்டல் பணியாளர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயங்களுடன் இருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது குறித்து காவல்துறையினர் விசாரணையில், இருவரும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தப்பா (58) மற்றும் பிந்து (46) என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 26ஆம் தேதி இங்கு அறை எடுத்து இவர்கள் தங்கி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அறை திறக்கப்படாமல் இருந்ததும், இன்று அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் அறையை திறந்து பார்க்கையில் இது போன்று சம்பவத்தை பார்த்துள்ளதும் தெரியவந்தது.


இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காட்டூர் காவல்துறையினர், கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக