ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

இலங்கையில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது

 வீரகேசரி :இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் நேற்று (06.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில்,  30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 12 ஆண்களும், 08 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 ஆண்களும். 43 பெண்களுமாக 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5017  ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 2,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் இன்று (07.08.2021) மேலும் 2,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,043 உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், 30,330 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  2,487 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 2,90,794 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  5,017 ஆக உயர்வடைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக