திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து 3 மாத கர்ப்பிணி எரித்து கொலை.. காதல் கணவர் கைது

திருமணம் முடிந்த 3 நாளில் மனைவியை எரித்து கொலை செய்த கணவன் : விசாரணையில்  சொன்ன காரணம்!! – வவுனியா நெற்

Vishnupriya R  - Oneindia Tamil  :   மதுரை: அவனியாபுரத்தில் திருமணமாகி மூன்றாவது நாளிலேயே கர்ப்பிணி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அவரது காதல் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சோழவந்தான் ராயபுரதைச் சேர்ந்த சகாயராஜ் - செல்வமேரி என்பவரின் மகள் கிளாடிஸ் ராணி வயது(21) இவர். அவனியாபுரம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கும் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கிளாடிஸ் ராணி 3 மாதம் கர்ப்பமானாள். இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே காரணமானவர் யார் என கேட்டுள்ளார்.
அப்போது கிளாடிஸ் ராணி பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணி என்பவர் என கூறியதை அடுத்து பெற்றோர் அவரை அழைத்து பேசி உள்ளனர். அப்போது ஜோதிமணி கர்ப்பத்திற்கு காரணம் நான் இல்லை என கூறியதாக தெரிகிறது.



இதனையடுத்து ஜோதிமணியின் பெற்றோருக்கே தெரியாமல் பெண்ணின் பெற்றோர் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜோதிமணி வைக்கம் பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து செல்வதாக கடந்த 4ம் தேதி கிளாடிஸ் ராணியை அழைத்துச் சென்றார்.

அப்போது அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் உள்ள முட்புதரில் வைத்து எரித்துக் கொலை செய்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஜோதிமணி மனைவியை காணவில்லை என பெண்ணின் பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து சோழவந்தான் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணியை விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிளாடிஸ் ராணியை எரித்துக்கொலை செய்ததாக கணவர் ஜோதிமணி ஒப்துக் கொண்டார். எனவே சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ஜோதிமணியின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். கிளாடிஸ் ராணியை ஜோதிமணி தனியாளாக கொலை செய்தாரா இல்லை நண்பர்களுடன் இணைந்து கொலை செய்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக