ஞாயிறு, 11 ஜூலை, 2021

திண்டுக்கல் திரு. I. லியோனி M Sc (Physics), M phill, B Ed

May be an image of 1 person and text that says 'BREAKING NEWS SUN /NES 다” தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராகிறார் ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்!'

Kandasamy Mariyappan  : திரையில் பார்ப்பதை, உண்மை என்று நம்பக்கூடிய உளவியல் குறைபாடு மக்களிடத்தில் உள்ளது.!
மிகச்சிறந்த அய்யப்ப பக்தரான திரு. MN. நம்பியார் அவர்கள் சினிமாவில் வில்லனாக நடித்ததால்.., உண்மை வாழ்க்கையிலும் அவர் அப்படித்தான் என்று நம்புகிறோம்.!
அதேவேளையில் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த திரு. எம்.ஜி. ராமச்சந்திரன், சினிமாவில் ஹீரோவாக நடித்ததால்.., நல்லவர் என்றும் கடவுள் என்றும் நம்பி விடுகிறோம்.!
அதேபோன்று திண்டுக்கல் I. லியோனி அவர்களை காமெடி கலந்த பேச்சாளராக, பட்டிமன்ற நடுவராக பார்த்துப் பழகியதால்.., உண்மை வாழ்க்கையிலும் அவர் படிக்காத காமெடியனாக பார்க்கின்றனர்.!
உண்மையில் அவர், M Sc (Physics), M phill, B Ed படித்த அறிவியல் ஆசிரியர்.! மிக எளிதாக மாணவர்களுக்கு புரியக்கூடிய அளவில் பாடம் நடத்துபவர்.
இவற்றுக்கெல்லாம் மேலாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த, மக்களின் தேவையை, தமிழ்நாட்டின் தேவையை உணர்ந்த, புரிந்த, இடதுசாரி சிந்தனையாளர்.!


ஆனால்  எப்படியோ MBBS படித்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவதையே தொழிலாக வைத்துள்ள திரு. அன்புமணி, திருமதி. VN. ஜானகி, செல்வி. ஜெயலலிதா உட்பட பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த திரு. ராமச்சந்திரனை தலைவராக ஏற்றுக்கொண்ட திரு. பன்னீர்செல்வம், ரவுடியாக வாழ்ந்து 10ம் வகுப்பை தாண்டாத திருமதி. வளர்மதி அவர்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக வைத்து அழகு பார்த்த திரு. பழனிச்சாமி போன்றவர்கள் திரு. லியோனி அவர்களின் தகுதியை பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது..!
இந்த அடிமைகளை பயன்படுத்தி, RSS கும்பல் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பிற்போக்குத்தனமாக மாற்றி சீரழித்ததை.., தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்த, தமிழ்மொழி மீது பற்றுக் கொண்ட, தமிழ் மக்களுக்கு எது தேவை என்று உணர்ந்த ஒருவர் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வந்தால் மட்டுமே அதனை சரிபடுத்த முடியும்.!
அதற்கு திண்டுக்கல் திரு. I. லியோனி அவர்கள் சரியான தேர்வு என்பது எனது பார்வை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக