நக்கீரன் : அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (18/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சங்கத் சிங் கில்ஸியான், சுக்விந்தர் சிங் டேனி, பவண் கோயல், குல்ஜித் சிங் நாக்ரா ஆகியோரையும் நியமித்து சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக