புதன், 21 ஜூலை, 2021

முதல்வர்கள் படங்கள் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படம்... சர்ச்சை வெடித்ததால் அகற்றம்

May be an image of 5 people, people sitting and people standing

  Mathivanan Maran - e Oneindia Tamil  : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்கள் வரிசையில் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி எம்.எல்.ஏ. படம் இடம்பெற்றது சர்ச்சையானது.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உதயநிதி ஸ்டாலின் படம் அகற்றப்பட்டிருக்கிறது.
தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இணையான மரியாதையை உதயநிதி எம்.எல்.ஏ.வுக்கும் தருகின்றனர். அவர்களின் சட்டை பைகளிலும், மொபைல் ஃபோன்களிலும் ஸ்டாலினுக்கு பதிலாக உதயநிதி படமே பளிச்சிடுகிறது.
மேலும் தங்கள் இல்லங்களிலும், எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் உதயநிதியின் படத்திற்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஜூனியர் அமைச்சர்கள் இதனை செய்தால், உதயநிதிதான் தங்களின் எதிர்காலம் என நினைத்துக் கொள்ளலாம். சீனியர் அமைச்சர்கள் சீனியர் அமைச்சர்கள் ஆனால், சீனியர் அமைச்சர்கள் கூட இதைத்தான் செய்கிறார்கள் என்பதுதான் சர்ச்சை.



அவர்களும் கூட ஸ்டாலினுக்கு இணையான முக்கியத்துவம் உதயநிதிக்குக் கொடுக்கின்றனர். இதை தவறு என்று சொல்லிட முடியாது. அவர்கள் கட்சி. யாரை உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்பது அவர்களின் உரிமை.

சீனியர் அமைச்சர்கள் சிலர் தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் இருக்கும் தங்கள் அறையில், தமிழக முதல்வர்கள் என வரிசைப்படுத்தி அண்ணா, கருணாநிதி ஸ்டாலின் என படங்களை மாட்டியுள்ளனர். அமைச்சர் ஒருவரின் அறையில், முதல்வர்கள் வரிசையில் உதயநிதியின் படமும் இடம்பெற்றதால் சர்ச்சையானது.

பார் கவுன்சில் வழகறிஞர்கள் சிலர் அந்த அமைச்சர் ஒருவரை கோட்டைக்கு சென்று சந்தித்த படத்தை வெளியிட்டிருந்தனர். அதில் முதல்வர்களின் வரிசையில் உதயநிதியின் படம் இருந்ததால் பல்வேறு விமர்சனங்களையும் உருவாக்கியது. மு.க.ஸ்டாலின் உத்தரவு மு.க.ஸ்டாலின் உத்தரவு பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் தந்த அட்வைசில் அந்த அமைச்சரின் அரசு அலுவலக அறையில் இருந்த உதயநிதியின் படம் எடுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் , முதல்வர்களின் படம் இருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்க வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக