வெள்ளி, 23 ஜூலை, 2021

நூற்றாண்டு கண்ட திராவிட கருத்தியலின் இருண்ட காலம் எது?

May be a black-and-white image of 1 person and sitting

Muralidharan Pb  : பெரியாரின் கருத்துக்களை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்ல தவறிவிட்டனரோ பெரியாரின் பெயரில் இயங்கும் இயக்கங்கள்?  சில பேச்சாளர்கள்/ கருத்தியலாளர்கள் இதில் விதிவிலக்கு.
எங்கே பெரியாரை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல வேண்டும்?
எங்கே பெரியாரை கொண்டு செல்ல தவறவிட்டோம்?

Sridharan Chakrapani  : பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் மட்டுமே என்றளவுத்தான் பெரியியர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
பெரியார் என்றால் சாதி மத மறுப்பாளர், பெண்ணடிமைக்கு எதிரானவர், பகுத்தறிவு சுயமரியாதை ஆகியவைகளை வற்புறுத்தியவர் என்பதை அவ்வளவு வலிந்து சொல்லவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது!

பல்லாவரம். டி.சம்பத்  : அண்ணா அது வெள்ளி நாற்காலியண்ணா?
ஜெயலலிதாவுக்கு மடிப்பாக்கம் வேலாயுதம் கொடுத்தது மாதிரி
அந்த காலத்துல யாராவது கொடுத்திருப்பாங்களோ?
தலைவர் கலைஞரின் கருத்துக்களையும்,
அவரின் சாதனைகளையுமே கொண்டு சேர்க்கவில்லை.
இப்போதே தலைவர் கலைஞர் ஸ்டாம்ப் சைஸ் ஆயிட்டார்..


Muralidharan Pb  : பல்லாவரம். டி.சம்பத் இப்ப பெரியாருக்கு தான் ஆபத்து, அது சரியாகிவிட்டால் கலைஞருக்கு வருவோம். பெரியாரில் கலைஞரும் உள்ளடங்கிவிடுவார் அண்ணா

Santhosh Kumar  : Muralidharan Pb. அண்ணா இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த உடன் எல்லா அடிக்கல் நாட்டு விழாவுக்கு பார்ப்பனர் அழைக்கிறார்கள் இதே தலைவர் கலைஞர் ஆட்சியில் நடந்து இருக்கா
திமுகவிலே தந்தை பெரியார் பற்றி மறறந்து விட்டார்கள்

பல்லாவரம். டி.சம்பத்  : Muralidharan Pb அண்ணா அது வெள்ளி நாற்காலியண்ணா?

 Muralidharan Pb : பல்லாவரம். டி.சம்பத் இருந்தால் என்ன தப்புங்கண்ணா? பெரியாரை விட பணம் படைத்தவன் உண்டா?

பல்லாவரம். டி.சம்பத்  : Muralidharan Pb  அப்ப சரிண்ணா...

பல்லாவரம். டி.சம்பத்   Muralidharan Pb  அண்ணா
இந்த பூண்டி வாண்டையார்,

கே படிக்காசு  : மதவாத தலை தூக்கும் கொங்கு பகுதியில் இன்றும் தேவை பெரியார்

Kandasamy Mariyappan  : உண்மை

Radha Manohar : மென்மையான சொற்களால் கூறுவது ஒரு நற்பண்பு என்பதால் சில விடயங்களை அழுத்தமாக கூற தவறி விடுகிறோம் என்றெண்ணுகிறேன்
அழுத்தமான உண்மைகள் கூட மென்மையான சொற்களால் கூறப்படும்போது அதன் வீச்சு மறைந்துவிடுகிறது
திராவிட இயக்கங்களின் பிரபாகரன் தொடர்பானது நூற்றாண்டு கண்ட திராவிட கருத்தியலின் இருண்ட காலங்களாகும்.
இனியும் மூடி மறைத்து முகம் பார்த்து மெல்ல சொல்வதால் எந்த பயனும் எவருக்கும் விழையப்போவதில்லை
ஏற்கனவே விழையக்கூடிய அத்தனை தீமைகளும் இந்த இருண்ட காலங்களில் ஏற்பட்டு விட்டன
திராவிட இயக்கங்கள் புலிகளுக்கு ஊடக வெளிச்சமும் இதர உதவிகளும் வழங்கியது போல கொஞ்சமாவது பெரியாரை அறிமுக படுத்தி இருந்தால் ஈழப்போராட்டம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்
அது ஒரு வலது சாரி பாசிசமாக மாறி அழிந்து போயிருக்காது
அந்த பாசிச வெறிக்கு மேலும் மேலும் போதை ஊட்டியதைதானே இவர்கள் செய்தார்கள்
இப்போதும் பலர் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
அந்த பாசிசத்தின் விதைகளை தமிழ்நாட்டிலும் விதைத்து கொண்டிருக்கிறார்கள்

Muralidharan Pb  : Radha Manohar இதைத்தான் சூசகமாக எழுத நினைத்தேன். பட்டவர்த்தனமாக தெளிவாக சொல்லிவிட்டீர்கள் சார்.
பெரியார் கூறுவது போல நம் வீட்டில் உள்ள குப்பையை சுத்தப்படுத்த வேண்டி உள்ளது. அதைச் செய்யாமல் போனதால் பார்ப்பனீய சக்திகள் தலைதூக்கியுள்ளன. இவ்வாறாக அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவருக்கு உதவிகள் என்பது தேவையானதா?

Radha Manohar  : Muralidharan Pb திராவிட கருத்தியல் என்றாலே வெறும் கடவுள் மறுப்பு என்பதாக சுருக்கி காட்டுகிறார்கள் திராவிடம் என்பது தெலுங்கு கன்னட சூழ்ச்சி என்று பொதுபுத்திக்கு தவறான பாடத்தை புலி பாசிஸ்டுகள் ஏற்படுத்தி விட்டார்கள் திராவிட இயக்கங்கள் திராவிட கருத்தியலுக்கு வாங்கி தந்த சீதனம் இதுதான் இவர்கள் புலிக்கு காவடி தூக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெரியாரின் முதுகில் குத்துகிறார்கள்

Kannan Venkatramani  : நல்ல பதிவு சார் அவரது உயர்ந்த சிந்தனை சிந்திக்கும் ஆற்றல் மற்றவர்கள் மனம் புண்படாதவாறு உயர்ந்த நோக்கத்தில் அனைவரும் ஏற்கும் விதத்தில் பதிவு அவசியம்

Dev JB  : கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெரியாரை, இயக்கங்கள் விட்டுவிட்டனர். பெரியாரை பேசினால் கொள்கை பற்று என்பதை தாண்டி பொருளாதாரமும் அவர்களுக்கு வரும்படி செய்யவேண்டும். காலமெல்லாம் அவர்கள் பெரியார், பெரியார் னு சொல்லிட்டிருந்தா போதுமா. தி.க வும், திமுக வும் சேர்ந்து யோசிக்கவேண்டிய ஒரு தீவிரமான விஷயம்.

Kandasamy Kandasamy  : விவாதிப்போம்

Jemi Raja  : இன்னமும் பெரியாரை விட பிரபாகரனே உயர்ந்தவர் என்பதை இந்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த பெருமை அவர்களையே சாரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக