திங்கள், 26 ஜூலை, 2021

கனடாவில் மேற்படிப்பு படிக்க இலகு வழி உள்ளது! இதோ விசா வழிகாட்டி முறைகள்

Study in Canada as an international student - Canada.ca

Nivetha Sathiyan   :   கனடாவில் மாணவர்  விசாவுக்கு விண்ணப்பிக்கும் படிமுறை
1.   முதலில் நீங்கள் கனடாவில் படிக்க விரும்பும் கற்கை நெறியையும், குடியேற விரும்பும் மாகாணத்தையும் கற்க விரும்பும் கல்லூரி/ பல்கலைக்கழகத்தையும்  தெரிவு செய்யுங்கள்
https://www.universitystudy.ca
https://www.univcan.ca
https://www.cicic.ca/851/education.canada
https://www.collegesinstitutes.ca/our.../member-directory/
2.   அந்த கல்வி நிறுவனம் Designated Learning Institution List (DLI) இல் உள்ளதா என உறுதி படுத்துங்கள். உங்கள் கல்வி நிறுவனம் DLI லிஸ்ட் இல் இடம்பெறாவிடில் உங்கள் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த DLI லிஸ்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், CEGEP, Vocational கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகள் (private career colleges) மொழிதொடர்பான கற்கை நிறுவனங்கள் (language schools ) போன்றவை அடங்கும்.


நீங்கள் ஸ்டுடெண்ட் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு இந்த Designated Learning Institution (DLI #) நம்பர் தேவை. அந்த DLI நம்பரை கீழே உள்ள லிங்கை தெரிந்து அந்த பக்கத்தின் கீழே அடியில் View list by province or territory எனும் dropdown menu வில் உங்கள் கல்வி நிறுவனம் இருக்கும் மாகாணத்தை தெரிவு செய்து உங்கள் கல்வி நிறுவனத்தின் DLI நம்பரை பெறலாம்
https://www.canada.ca/.../designated-learning...
3. அடுத்து அந்த கல்வி நிறுவனம் கற்கை நெறி முடிவில் Post Graduation Work Permit வழங்குகிறதா என உறுதி படுத்துங்கள். அதையும் இதே லிங்க் இல் https://www.canada.ca/.../designated-learning... கீழே drop down  menu இல் View list by province or territory இல்  உங்கள் கல்வி நிறுவனத்தை தெரிவு செய்து அது PGWP வழங்குகிறதா என பார்க்க: Offers PGWP eligible programs என்பதன் கீழ் YES  / NO என குறிப்பிட்டு இருக்கிறதா என சரி பாருங்கள்
PGWP  பெறுவதற்கான நிபந்தனைகள்:  https://www.canada.ca/.../after-graduation/eligibility.html
4.   உங்கள் கல்வி நிறுவனம் கோவிட் பாதுகாப்பு முறைகளுக்கு தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லையேல் (கோவிட் காலத்தில்) இங்கு வரமுடியாது. கீழே உள்ள லிங்க் இல் உங்கள் DLI இருந்தால் நீங்கள் கனடாவிற்கு வருவதற்கு அனுமதிக்க படுவீர்கள். DLIs must have a COVID-19 readiness plan  
https://www.canada.ca/.../coro.../students/approved-dli.html
5.   உங்கள் பல்கலைக்கழகம் வேண்டும் IELTS புள்ளிகளை  IELTS  ஆங்கில மொழி பரீட்சையில் தோற்றி அதற்கான புள்ளிகளை பெற்றுக்கொள்ளுங்கள்
6.  உங்களை கல்வி சான்றிதழ்களை உங்கள் கல்வி நிறுவனம் அங்கீகரிக்கும் Evaluation Body (ie: WES) க்கு நீங்கள் கல்வி கற்ற பல்கலைகழகத்தை நேரடியா உங்கள் சான்றிதழ்களை அனுப்பி வைக்க விண்ணப்பியுங்கள். உங்கள் சான்றிதழ்களை அந்த நிறுவனம்/ அமைப்பு கனடிய கல்வித்தரத்துக்கு எந்தளவு நிகரானது என evaluate பண்ணி அறிக்கை  தரும்
7.  Proof of Funds: வங்கியில் உங்களுடைய கற்கை நெறி, கனடாவில் வசிப்பதற்கான செலவு என்பவற்றை நீங்கள் சமாளிக்க கூடியவராக இருக்குறீர்கள் என்பதை நிரூபிப்பதற்கு போதிய அளவு பணவசதி இருக்குறது என்பதை காட்டவேண்டும். குறைந்தது 6 மாதம் வைப்பில் இருப்பதாக அது காட்டப்படவேண்டும்
8. Sponsor: உங்களுக்கு ஸ்பான்சர் ஒருவர் கனடாவில் இருப்பாராக இருந்தால் அவரின் கடிதம் அல்லது சத்தியக்கடதாசி வழங்கப்பட வேண்டும்
9. SOP: நீங்கள் கல்வி கற்க கனடாவை தெரிவு செய்ததன் நோக்கம், நீங்கள் படிக்கும் கல்வி யை தெரிந்ததன் நோக்கம், கல்வி கற்றபின் நீங்கள் என்ன எதிர்காலத்தில் செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் விசா முடிவில் இலங்கைக்கு திரும்பியபின் என்ன செய்ய திட்டமிட்டு உள்ளீர்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு SOP எனப்படும் Statement of Purpose உங்களால் வழங்கப்பட வேண்டும். கனடிய சட்ட திட்டங்களுக்கு இணங்கி நடப்பேன் என வாக்குறுதி வழங்க படவேண்டும்.
விண்ணப்பிக்கும் போது கவனமாக சரியான உண்மையான தகவல்களை கொடுங்கள் நீங்கள் மோசடியாக தகவல்களை மறைத்து அவை பிடிபட்டால் 5 வருடத்துக்கு மறுபடி விண்ணப்பிக்கமுடியாதவாறு தடை விதிக்கப்பட்டு விடும்
நீங்கள் தெரியும் பல்கலைக்கழகம் / கல்லூரி உங்கள் கல்விச்சான்றிதழ்களை அவர்கள் அங்கீகரிக்கும் evaluation body க்கு அனுப்பி அவர்கள் மூலம் உங்கள் கல்வித்தகைமையை எந்த நிலை  கனடிய கல்வித்தகைமைக்கு ஈடாக இருக்கிறது என்று அறிக்கை பெற்று அனுப்ப கோரின், முதலில் கனடாவில் இருக்கும் அந்த evaluation body க்கு உங்கள் கல்விப்பத்திரங்கள் நீங்கள் கற்ற university or  college இனால் நேரடியாக அனுப்பப்பட வேண்டும். இதை நீங்களோ, நடுவர்கள், முகவர்கள் மூலமோ அனுப்ப முடியாது. Education evaluation by WES தொடர்பான மேலதிக விபரங்களை தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.
சுருக்கமாக சொன்னால்:
1. கற்கை நெறி தெரிவு
2. கல்லூரி / பாடசாலை தெரிவு
3. ஆங்கில புலமைக்கான சான்றுப்பரீட்சை புள்ளிகள். (IELTS, TOEFL- பொதுவாக கனடிய பல்கலைகழகங்கள் IELTS (Academic) overall  6.0 and above கேட்பார்கள்.  
4. கல்வித்தகைமை அறிக்கை ( Education Evalutaion Report by Canadian evaluation body
5. வைப்பிலுள்ள பணத்தை உறுதிப்படுத்தும் வங்கிக்கடிதம்
6. கனடிய பல்கலைகழகம் / கல்லூரிக்கு நீங்கள் இவற்றோடு விண்ணப்பிக்கலாம்
7. உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டால் கற்கை நெறிக்கு அனுமதிக்கும் கனடிய பலகலைக்கழக / கல்லூரியின் கடிதம் விண்ணப்பம்
8. SOP - Statement of Purpose
9. உங்கள் பாஸ்போட் & பிறப்பு சான்றிதழ் & NIC
10. போலீஸ் சான்றிதழ் - confirming no criminal record
இதன் பின்பு நீங்கள் கல்வி கற்பதற்கான விசா வுக்கு ஒன்லைன் இல் கீழ் கண்ட லிங்கில் விண்ணப்பிக்கலாம் ⬇️
ஸ்டுடண்ட் விசாவுக்கு நீங்கள் online மூலமும் / விண்ணப்ப படிவங்களை நிரப்பி அனுப்புவதன் மூலமும் விண்ணப்பிக்க முடியும்
Paper application link:
https://www.cic.gc.ca/.../inf.../applications/student.asp...
Online application link : Open GCKey account
https://www.canada.ca/.../services/application/account.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக