நக்கீரன் செய்திப்பிரிவு : அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில், தினந்தோறும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அவர் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகலா பேசும் ஆடியோவும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா பேசும் மேலும் ஒரு ஆடியோ இன்று (01/07/2021) வெளியாகியுள்ளது.
அதில், "எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருந்திருக்கிறேன். இது யாருக்கும் தெரியாது. கட்சித் தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்.ஜி.ஆர். கேட்பார். கட்சியில் இது இப்படி இருந்தால் சரியாக இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் நான் கருத்து கூறியது உண்டு. எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி எப்போதுமே ஒற்றுமையுடனே இருக்க வேண்டும்; பிரிந்திருக்கக்கூடாது" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக