Samaran Thamarai : ;கிருஷ்ணசாமி தியாகராஜன் என்கிற தோழர் தியாகு அவர்களுக்கு சமரன் தாமரை எழுதிக்கொள்வது :
நான் கவிஞர் தாமரையின் ஒரே மகன். உங்கள் முகநூலில் நீங்கள் பகிர்ந்திருந்த அவதூறுக் கடிதத்திற்குப் பதிலாகத்தான் இதை எழுதுகிறேன்.
இந்தக் கடிதத்தை 'அப்பா' என்று அழைத்து உங்களுக்கு எழுத வேண்டியது, ஆனால் அப்படி எழுத முடியாதபடிக்கு அருவருப்பு குமட்டுகிறது. உங்கள் பெயரின் முன்னால் உள்ள கிருஷ்ணசாமி என்கிற உங்கள் அப்பாவிற்கும் நீங்கள் பெருமை சேர்க்கவில்லை, ஓர் அப்பாவாகவும் பெருமை சேர்க்கவில்லை. எனவே அந்த வார்த்தையை நான் தவிர்க்கிறேன், வெறுக்கிறேன்.
கடந்த சில நாட்களாகவே உங்கள் அடிப்பொடிகளை அல்லக்கைகளை வைத்து என் அம்மா கவிஞர் தாமரையைப் பற்றி அவதூறாக எழுதியும் அபாண்டமாக பழி சுமத்தியும் நீங்கள் செய்து வரும் இழிசெயல்கள்தாம் என்னை இந்தக் கடிதத்தை எழுத வைத்துள்ளன.
என் அம்மா எப்போதுமே என்னை இந்த விவகாரங்களில் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். " நீ உன் படிப்பை மட்டும் பார் ; மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் " என்று அத்தனை பாரங்களையும் அவர்தான் சுமப்பார். இப்போதும் நான் இதை எழுதுவது அவருக்குத் தெரியாது, தெரிந்தால் தடுத்து விடுவார். ஏனெனில் உங்கள் கதையைச் சொல்லப் போனால் அது அத்தனை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் சாக்கடைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
சிறுவனாகிய என்னை அது போன்றவற்றைப் பேச அம்மா எப்படி அனுமதிப்பார் ?
என் வீட்டில் பெண்களை 'டி' போட்டு அழைப்பதே பெரிய குற்றமாகும். வாடி போடி என்கிற வார்த்தைகளை வீட்டில் கேட்கவே முடியாது. கெட்ட வார்த்தை பேசினால் வாயில் சூடு வைத்து விடுவேன் என்று மிரட்டுபவர் அம்மா. அப்படிப்பட்டவர் இப்படியோர் ஆபாச, அயோக்கிய கும்பலில் சிக்கிக் கொண்டது உண்மையிலேயே அவர் செய்த பாவம்தான் !
ஏன் தியாகு, என் அம்மாவை துரத்தி துரத்தி பொய்சொல்லி ஏமாற்றி நயவஞ்சகமாக உங்கள் வலையில் விழ வைத்து திருமணமும் செய்து கொண்டீர்கள். பிறகாவது ஒழுங்காக இருந்திருக்கலாம் அல்லவா ? அது என்னது, பிறக்கும்போதே அயோக்கியனாகப் பிறந்தீர்களா ?
என் அம்மா உங்களை முறையாக மணந்த சட்டப்பூர்வமான மனைவி. இப்போதும் நீங்கள் குடும்ப உறவுக்கு அப்பாற்பட்ட பெண்களோடுதான் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதை மறைத்து ஏதோ என் அம்மா உங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்து உங்கள் குடும்பத்தை கெடுத்த மாதிரியும், நீங்கள் ஏதோ பெரிய யோக்கியன் போலவும் உங்கள் மகள் சுதா என்னும் இன்னொரு கழிசடை பேசுகிறது. தவறு செய்தது நீங்கள், தண்டனை அனுபவிப்பது என் அம்மாவா ?
நான் புரட்சிக்காரன், நான் போராளி,
வேலைக்குப் போவதெல்லாம் அருவருப்பான செயல், சம்பாதிப்பதெல்லாம் சாதாரணர்களின் தொழில், நான் புனிதன், நான்தான் மார்க்ஸ், நான்தான் தமிழ்நாட்டின் பிரபாகரன் என்று ஓயாமல் வாயில் ரயில் ஓட்டிக் கொண்டே இருப்பீர்களே, நீங்கள் எப்படி உங்கள் முன்னாள் குடும்பத்தைச் சோறு போட்டுக் காப்பாற்றியிருப்பீர்கள் ? 🤔. உங்கள் மகள்களான சுதா, திலீபாவைப் படிக்க வைத்திருப்பீர்கள் ??? 🤔
நீங்கள் தின்ற சோறு என் அம்மா போட்டது, நீங்கள் உடுத்திய உடை என் அம்மா கொடுத்தது, நீங்கள் இயக்கம் என்ற பெயரில் நடத்திய நாடகம் என் அம்மாவின் செலவில் நடந்தது, உங்கள் முன்னாள் மனைவிக்கு உங்கள் மகளுக்கு சோறு போட்டது படிக்க வைத்தது மருத்துவம் பார்த்தது அனைத்தும் என் அம்மாதான்... அதுபோக அவ்வப்போது நீங்கள் அழைத்து வந்து நாடகமாடும் 'இவருக்கு உதவி வேண்டும், அவருக்கு வேலை வேண்டும்' என்று கேட்கும்போதெல்லாம் அள்ளி அள்ளி இறைத்தவர் என் அம்மா. கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள் அவருடையவை. அவருக்கும் கொல்லையில் இருந்து பறித்து வரவில்லை பணம் ! இரவுபகல் கண்விழித்து, கையொடிய எழுதியெழுதி திரைப்படத்துறையில் உழைத்து சம்பாதித்த பணம். தனக்கென்று எதையும் வாங்கிச் சேர்த்துக்கொள்ளாதவர் எளிமையான வாழ்க்கை வாழும் என் அம்மா. உங்களுக்குக் கொடுத்துக் கொடுத்து சீரழித்ததை தனக்காக வைத்திருந்தால் இப்போதும் நாங்கள் வாடகை வீட்டில் வாழ்ந்திருக்க நேர்ந்திராது. திட்டமிட்டு அவரைச் சுரண்டித் தின்றுவிட்டு, பட்டப்பகலில் இன்னொரு பெண்ணோடு ஓடிப்போய் விட்டு கொஞ்சங்கூட நன்றி இல்லாமல், "நீ அதைச் செய்தாயா, இதைச் செய்தாயா" என்று ஆளைவிட்டுக் கேட்க வைக்கிறீர்களே, வெட்கமாயில்லை ?.
வீட்டின் ஆண் என்ற முறையில் ஒரே ஒரு நயாபைசா சம்பாதித்ததுண்டா ? குழந்தை எனக்காக இதுவரை ஒரே ஒரு பொருள் வாங்கிக் கொடுத்ததுண்டா ? ஒரு ஐந்து ரூபாய்க்கு பலூன் வாங்கிக் கொடுத்து விட்டு அந்தப் பணத்தையும் அம்மாவிடம் கேட்டு வாங்கிக் கொண்டதெல்லாம் அறிவேன் ! 😠
உங்கள்மேல் நான் மதிப்பிழந்து விடக்கூடாது என்பதற்காக சைக்கிள், புத்தகப்பை, கிரிக்கெட் மட்டை போன்றவற்றை நீங்கள் வாங்கியது போல் வாங்கிக் கொடுத்தவர் அம்மா.
இன்று கூட செலவுக்குக் கேட்டால் என் கையில் 100/- க்கு மேல் தர மாட்டார்கள், கெட்டுப் போய்விடுவேனாம். ஆனால் ஊரில் போனது வந்ததுக்கெல்லாம் வாரிவாரிக் கொடுத்தார் என்றால் எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்காதா ? 😡
உங்கள் கடந்த 20 ஆண்டு காலத்திற்கான வரவு செலவு கணக்கைக் காட்ட முடியுமா??
யார் யார் உங்களுக்குப் பணம் கொடுத்து வாழ வைத்தார்கள் என்று பார்க்கலாமா ? அம்மாவும் இன்னபிற இளிச்சவாய் இயக்கத் தோழர்களும் சேர்ந்துதான் உங்கள் இத்தனையாண்டு வாழ்வை ஓட்டி வந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துப் பேசவும்.
விஜயலட்சுமியின் மகள் என்ற பெயரில் இன்னொரு கழிசடை கடிதம் எழுதியிருக்கிறது. மூக்கு ஒழுக்கிக் கொண்டு வந்து நின்ற அந்தக் கருமாந்திரத்துக்கும் என் அம்மாதான் பணம் கொடுத்தார்கள், படிக்க வைத்தார்கள். இன்று கூசாமல் அம்மாவை அசிங்கப் படுத்திப் பேசுகிறது. கேட்பதற்கு ஆள் இல்லை என்கிற நினைப்பா ? எனக்கும் 18 வயதாகி விட்டது என்பதை நினைவுறுத்துகிறேன்.
வீட்டிற்குப் புதியவர்கள் யாரையும் அழைத்து வர அனுமதிக்க மாட்டார் அம்மா. ஆண் பணியாளர்களுக்கு அறவே தடை. 'நாம் தனியாக இருக்கிறோம் கண்ணா, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்துவார்.
சமூகம் கெடக் காரணமாக இருந்து விடக் கூடாது என்று தன் திரைப்படப் பாடல்களில் கூட தவறான ஒரு வார்த்தை எழுதாதவர், அப்படிப்பட்டவரைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் உங்களைப் போன்ற ஊரறிந்த குற்றவாளிகள்தாம் பேச முடியும். பேசாமல் பாலியல் பஞ்சாயத்துக்கு சொம்பு தூக்குவதையே செய்து கொண்டிருந்திருக்கலாம்.
இந்த விஜயலட்சுமியும் அவர் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் அழுது, 'தியாகு ஐயாவின் பிடியில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சியதற்கு அப்போது சிறுவனாக இருந்திருந்தாலும் நானே சாட்சி. இந்த விஜயலட்சுமியோடு நீங்கள் ஆபாசமாக நடந்து கொண்டது, அவள் அக்காவையும் மடக்கிப் போட்டு அவள் கணவரிடமிருந்து பிரித்தது ஆகியவற்றை நான் இங்கே சொல்லப் போவதில்லை, அதெல்லாம் பின்னால் அம்மா ஆதாரபூர்வமாக வெளியிடுவார்கள்.
ஆனால் உங்கள்மேல் அளவற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த என்னை ஏமாற்றி விஜயலட்சுமியோடு ஓடிப்போனீர்களே என்ன சாதித்தீர்கள் ? உங்களைத் தாத்தா என்கிறாளே விஜயலட்சுமியின் மகள், ஆனால் விஜயலட்சுமிக்கும் உங்களுக்குமான உறவு அப்பா-மகள் இல்லையே, எனக்கு ஒன்றுமே புரியவில்லையே, விளக்குவீர்களா மிஸ்டர் தியாகு ?. 😬
'அப்பா என்னை விட்டுப் போக மாட்டார்' என்று அதீதமாக நான் நம்பிக் கொண்டிருந்ததால், என் சின்ன மனதை உடைக்க விரும்பாத அம்மா யார் யாரையெல்லாம் சந்தித்தார், என்னென்ன பாடுபட்டார் என்று இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வைகோ மாமா வீட்டில் வைத்துப் பேசியபோதுகூட, 'விஜி விஜி' என்று நீங்கள் புலம்பிக் கொண்டிருந்தது எனக்கே இன்னும் நினைவிருக்கிறது. இவ்வளவு கேடுகெட்டவனா நீங்கள் ?
லதா என்கிற உங்கள் முன்னாள் மனைவி ( ex wife) - இவரைப் பெரியம்மா என்று குறிப்பிட வேண்டும் என்றுதான் அம்மா சொல்லியிருக்கிறார் - இவரும் எங்கள் வீட்டிற்கு வந்து, 'ஐயோ, என் மகள் சுதாவையும் அந்த அயோக்கியன் தியாகு விட்டு வைக்கவில்லை, கஞ்சாக்கேஸ், குடிகாரன் வே.பாரதிக்குத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறான், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று அம்மாவிடம் அழுததும் அம்மா அதையும் பரிவோடு அணுகி, அவரை அழைத்துக் கொண்டு சென்னையில் இன்னுமொரு பெரிய மனிதரிடம் சென்றதும் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம், ஆனால் வழக்கம்போல் நான்தானே அதற்கும் சாட்சி ?
மோகன்ராஜ் மாமாவும் திருப்பூரிலிருந்து சுப்பிரமணியம் மாமாவும் இன்னும் பல மூத்த இயக்கத் தோழர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் உங்கள் லீலைகளைக் கதைகதையாகச் சொன்னதற்கும் அம்மா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றதற்கும் வழக்கம்போல் நான்தானே சாட்சி ? போகும்போது மறக்காமல் என்னிடம்,
"கண்ணு, அம்மாவைப் பத்திரமா பார்த்துக்க, இனி நீதான் அம்மாவுக்கு எல்லாம்" என்று சொல்லிப் போனார்கள்.
உங்களுக்கு இன்னொன்று தெரியுமா மிஸ்டர் தியாகு ? கிளம்பி அவர்கள் நேராகப் போனது லதா பெரியம்மாவைப் பார்க்க ! அவரிடமும் உங்களைப் பற்றிச் சொல்லப் பெருங்கதை இருந்திருக்கிறது என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். பெரியம்மாவின் தங்கையைக் கூட நீங்கள் விட்டு வைக்கவில்லையாமே ! 😳
அம்மா சொல்லியிருக்கிறார் "லதா, நான் இருவருமே பாவம்தான். இருவரையும் அந்த அயோக்கியன் ஒருசேர ஏமாற்றியிருக்கிறான்".
உங்களுக்கும் வே.பாரதிக்கும் என்ன (ஆபாச) உறவு என்று லதா பெரியம்மா சொன்னது இன்னும் என் காதில் இருக்கிறது. சின்னப்பையனான எனக்கு இதெல்லாம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்று யூகிக்க முடிகிறதா ?
ஒருவன் வாழ்க்கையில் இத்தனை ஆபாசமா ? சொன்னால் யாராவது நம்புவார்களா ?. எழுதிக் கொடுக்கிறேன், உங்களைப் போன்ற ஒரு கேடுகெட்ட பிறவி இந்த உலகத்திலேயே இதுவரை பிறந்திருக்க முடியாது. த்த்தூ 😤
ஏதோ அம்மா பண்பானவராக இருந்ததால், என்னைக் காப்பாற்றி இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டார்.
அம்மா உழைத்து உழைத்து ஓடாய்ப் போனவர். அவருக்கு ஓய்வு தர வேண்டும். எவ்வளவோ சீரும் சிறப்புமாக வாழவேண்டியவர். உங்களிடம் சிக்கி சிதைந்து போய்விட்டார். இனியும் உங்கள் கோழைத்தனமான தாக்குதல்கள் தொடர்வதை அனுமதிக்க மாட்டேன்.
மீண்டும் நீங்களெல்லாம் ஒரு கும்பலாகச் சேர்ந்து ஊரைக் கெடுக்கப் புறப்பட்டிருக்கிறீர்கள், எத்தனை குழந்தைகள் பெண்கள் ஆண்கள் அழியப் போகிறார்களோ !
ஒரு குழந்தையாக, மகனாக நான் அடைந்த பாதிப்பு வார்த்தையில் சொல்ல முடியாதது. ஆனால் அதைக்காட்டிலும் இன்று அம்மா, தமிழர்களின் மனம் கவர்ந்த மாபெரும் பாடலாசிரியர், பெண்களில் ஒரு பெரும்தேவதை - அவரை அசிங்கப்படுத்தக் கிளம்பிய உங்களை சும்மா விடப் போவதில்லை.
'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்' - இது குறள்.
எந்த அவையில் என்னை முந்தியிருக்கச் செய்யப் போகிறீர்கள் ?
ஒருவேளை முந்தி என்பதை முந்தானை என்று புரிந்து கொள்வீர்களோ என்று பயமாக இருக்கிறது 🤔
எனக்கு ஒரேயொரு உதவி செய்யுங்கள் மிஸ்டர் தியாகு... எங்கேயும் நீங்கள்தான் என் தந்தை என்று சொல்லி விடாதீர்கள், அவமானத்தில் குறுகி நான் அலமாரியில் ஒளிந்து கொள்ள நேரிடும்.
ஆனால் பெருமைமிகு என் அம்மாவின் பெயரை என் பெயரின் பின் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு
சமரன் தாமரை.
பாவம்.
பதிலளிநீக்கு