வெள்ளி, 23 ஜூலை, 2021

நடிகை ஷில்பா செட்டி கணவர் குந்த்ரா பெண்களை நிர்வாணமாக்கி ஒவ்வொரு நாளும் லட்சம் லட்சமாக சம்பாதித்தார்

  Kalaimathi    -  tamil.filmibeat.com : மும்பை: பெண்களை நிர்வாணமாக்கி ஆபாச படங்களை தயாரித்த ராஜ் குந்த்ரா அதன் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சங்களை குவித்துள்ளார்.
ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டது தொடர்பாக கடந்த திங்கள் கிழமை இரவு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதமே இதுதொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் பொறுமை காத்தனர்
காவல் இந்நிலையில் திங்கள் கிழமை இரவு கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா செவ்வாய்க்கிழமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மும்பை போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.


அதன்படி ஆபாச படம் தயாரித்தது மற்றும் அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிட்டதில் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளியாக இருந்தது தெரியவந்தது.
மேலும் ராஜ் குந்த்ரா ஆபாச பட தயாரிப்பில் கடந்த 18 மாதங்களாக ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அதோடு ஆபாச படங்களை மொபைல் செயலியில் வெளியிட்டதன் மூலம் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது. 6 முதல் 8 லட்சம் வரை 6 முதல் 8 லட்சம் வரை அதன் பின்னர் ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை ராஜ் குந்த்ரா சம்பாதித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் ஆபாச படங்களை இது போன்ற செயலியில் இந்தியாவிலிருந்து அப்லோட் செய்ய முடியாது என்பதால் லண்டனில் இருக்கும் அவருடைய மைத்துனர் பிரதீப் பக்‌ஷி என்பவரின் கென்ரின் நிறுவனம் மூலமாக வீடியோக்களை அப்லோட் செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
 இந்தியாவிலிருந்து வீ- ட்ரான்ஸ்ஃபர் வாயிலாக லண்டனுக்கு இத்தகைய வீடீயோக்களை அனுப்பியுள்ளனர். Hotshot என்ற செயலியில் பணம் செலுத்தி இந்த வீடியோக்களை பார்க்கும் வகையில் வேலை பார்த்துள்ளனர். முடக்கப்பட்ட வங்கிக்கணக்கு முடக்கப்பட்ட வங்கிக்கணக்கு ஆபாச படங்களின் மூலம் ராஜ் குந்த்ரா எவ்வளவு சம்பாதித்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் அவர் வைத்திருந்த ஏழரை கோடி ரூபாய் பணத்தை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக