Prem Raja : கஜினி முகமது... சோமநாதபுரம் கோயிலை இவர் கொள்ளை அடித்தார் என வரலாற்றுப் பாடத்தில் வருகிறது!
அரசர்கள் ஒரு பகுதியின் மீது படையெடுத்தால் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை. கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை.
தொடர்ந்து ஆட்சி செய்பவர்கள் தங்களின் வீர, தீர பராக்கிரமங்களை சிறப்பாக எழுதி விடுவார்கள்.
அவனைப் புகழந்து பாடி வாங்கித் தின்னும் புலவர்களும் புறப்பட்டு விடுவார்கள். அது பிறகு வரலாறு ஆகிவிடுகிறது!
"இன்றைய குஜராத் அந்தக் காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி. இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.
ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்தது. சொல்லமுடியாத அளவு செல்வம் பக்தர்களால் குவிந்தது.
குஜராத்தின் ஆறு அரசர்களும் அந்தக்கோவிலின் பாதுகாவலர்களாக இருந்தனர்.
கோவிலின் அர்ச்சகர்கள் எத்தனைபேர் தெரியுமா? ......11,000 பேர்.
எந்நேரமும் பரபரப்பாக இருந்த இந்தக் கோவிலில் கோடிக்கணக்கான சொத்துக் சேர்ந்து கொண்டிருந்தது.
அதை எப்படியேனும் கொள்ளை அடிக்கவேண்டும் என்ற திட்டமும் பலருக்கும் இருந்தது.
கஜினி படையெடுத்து வந்த போதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்றுசேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச்செய்தனர்.
கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டுகாலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை.
பதினெட்டாவது முறையாக 25,000 போர்வீரர்களுடன் சோமநாத புரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம்போட்டு காத்திருந்தான் கஜினி!
அவர்படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறுபேரும் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம்
போய் " நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர். கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர். எளிதில் விரட்டி விடலாம்" என்று அனுமதி கேட்டனர். ஆனால் தலைமை அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.
தலைமை அர்ச்சகர் என்றால் அவன் அரசனுக்கும் மேலே உள்ளவன். ராஜ குரு...
தலைமை அர்ச்சகன் சொல்கிறான்,
" மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும், காளியும் கனவில் வந்து என்னிடம் சொன்னார்கள்.... " ஆனால் போர் செய்ய வேண்டியதில்லை. ஹோமங்களும், அன்னதானம், சுவர்ணதானம், கன்னிகாதானம் ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி, அரசர்களிடம் அதைச்செய்யுங்கள் என்று சொன்னான்...
அரசர்களுக்கு புராணங்களிலும், பிராமணங்களிலும், நம்பிக்கை குறைந்து வருவதால்தான் இப்படிப்பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்துகொண்டான்...
இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும், யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானமாகக் கொடுத்து விடுமாறு கட்டளையிட்டு, யாகசாலை நிறுவும் பணியில் ஈடுபட்டான்
1008 யாகசாலைகள் நிறுவி, குழிகளில் நெருப்பு வளர்த்து, நெய், கோதுமை, சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
பல நூறுபேர் மிலேச்சனிடம் இருந்து காப்பாற்ற வேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள். போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது.
நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார் கஜினி
கஜினியின் படைகள் வரும் சேதி தெரிந்ததும் தலைமை அர்ச்சகர் தமது முத்துப்பல்லக்கை அனுப்பி கஜினியை வரவேற்று அழைத்துவர அனுப்பிவைத்தார்.
முத்துப் பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடவைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.
கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காதனம் போடப்பட்டிருந்தது. அந்த சிங்காதனத்தின் பெயர் வியாச பீடம் என்பதாகும். இந்த சிங்காதனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய்.
கஜினி கோவிலில் போடப்பட்ட வியாச பீடத்தில் கம்பீரமாய் அமர, தலைமை அர்ச்சகர் கஜினியிடம்
"இங்குள்ள ராஜாக்களை எல்லாம் நான்தான் அடக்கி வைத்தேன்", என்று கூறிவிட்டு,
"விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்கமுடியாது.(நா விஷ்ணு ப்ருத்வீ பதி) என்று வேதங்கள் சொல்கிறது.
விஷ்ணுவின் அவதாரமான தாங்களே எங்களை இரட்சிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து விட்டு, எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.
யாரையும் இரட்சிக்க நான் வரவில்லை. சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற, அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க, அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விபட்டதற்கும், கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.
"அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது" என்று கூறிய கஜினி அர்ச்சகரின் இரு கைகளிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளையிட்டான்.
மிரண்டு போன பார்ப்பான் சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக்கொடுக்கிறார்.
தலைமை குருவின் தலைமையில் கோவில் இடிக்கப்படுகிறது. இடிக்க இடிக்க தங்கக் காசுகள் கொட்டிக் கொண்டே இருக்கிறது. கோவில் சாயத் துவங்குகிறது. அதுவரை காந்தக்கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.
நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்டவே அவைகளை வாரிவாரி அள்ளிப் போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள், 5000 ஆண்கள்,6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக்கொண்டு கஜினி சென்றான்.
இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்? என்ன ஆதாரம்?
இந்த விபரங்களை குஜராத்தி, உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல. ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி #தயானந்த_சரஸ்வதி.
சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர்.
1875 ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்.
1883 அக்டோபர் 30 இறந்தார்
அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட
"சத்தியார்த்தப் பிரகாசம்" என்ற நூலில் 11 வது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார்.
இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் எழுதிய நூலில் உள்ள விளக்கம்தான்.
1. ஆறு அரசர்களிடமும் இருந்து பார்ப்பனர்கள் கோவிலைக் கைப்பற்ற சதி செய்துள்ளனர்.
2. கஜினியை உள்ளே கொண்டுவந்து அரசர்களை விரட்டிவிட்டு, கஜினிக்கு தொகை கொடுத்து ஒதுக்கிவிடலாம் என்ற அவர்களது திட்டம் கஜினியிடம் செல்லுபடியாகவில்லை...
3.கோவிலை இஸ்லாமியரான கஜினி இடிக்கவில்லை. பார்ப்பனர்களே இடித்தது தெளிவாகிறது
தோழர் Prem Raja பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக