வெள்ளி, 16 ஜூலை, 2021

ஆப்கானிஸ்தானில் இந்திய ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் உயிரிழப்பு - தாலிபன் - ராணுவம் மோதல்

 நக்கீரன் :danish siddiqui  :  இந்தியாவை சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திகி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் பணியாற்றி வந்தார்.
தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள், தொடர் தாக்குதல் நடத்தி அந்தநாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வரும் நிலையில்,
டேனிஷ் சித்திகி ஆப்கான் இராணுவத்துடன் இணைந்து தங்கி இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்குமிடையேயான மோதல்களை பதிவு செய்து வந்தார்.
இந்தநிலையில் அவர், தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார்.
ரோஹிங்கியா அகதிகளின் இன்னல்களை ஆவணப்படுத்தியதற்காக ஊடக உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதினை வென்றுள்ள டேனிஷ் சித்திகி,


இந்தியாவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு, ஹாங்காங் போராட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
டேனிஷ் சித்திகி மறைவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் பத்திரிகையாளர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக