சனி, 31 ஜூலை, 2021

தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுன் வரக்கூடும்! அரசு ஆலோசனை .. கொரோனாவின் மூன்றாவது அலை?

 Hemavandhana -   Oneindia Tamil :   சென்னை: தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுன் போட்டுவிடப்படுமோ என்ற கலக்கம் சூழ்ந்து வரும் நிலையில், அரசு தரப்பிலும் அப்படி ஒரு டாக் ஓடியிருக்கிறதாம்..
பிறகுதான் முதல்வர் அந்த முடிவை கைவிட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.. ஒரே நாளில் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
அதிலும் 19 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது..
இதில் சென்னைதான் பிரதானமாக உள்ளது.. இப்படி தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது...
ஆனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை. இந்த 10 மாநிலங்களுக்கு மிக மிக கவனம் தேவை.. தளர்வுகள் கொடுக்க கூடாது..
முதல்வர் முதல்வர் சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் முதல்வரின் உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இப்படி ஒரு முடிவை அரசு அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் லாக்டவுன் போடலாமா என்ற ஆலோசனையும் அரசு தரப்பில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது..
இதற்கு காரணம், பக்கத்து மாநிலம் கேரளாவில் தொற்று அளவுக்கு அதிகமாக உள்ளது..
அடுத்த 3 வாரத்துக்கு அந்த மாநிலத்தில் இந்த பாதிப்பு கூடும் என்று மத்திய சுகாதாரத்துறையே எச்சரித்துள்ளது..
 3வது அலை பரவலின் தாக்கமும் தென்பட்டுள்ளது.. பாசிட்டிவ் கேஸ்கள் பாசிட்டிவ் கேஸ்கள் பக்கத்து மாநிலத்தில் இப்படி ஒரு பிரச்சனை என்றால், தமிழ்நாட்டிற்கும் பரவ அதிக காலம் பிடிக்காது..
அந்த மாநிலத்தில் பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமாகிக்கொண்டே போவதால், அந்த அளவு பாதிப்பு இங்கே வருவதற்குள் லாக்டவுனை போட்டுவிடலாம் என்று அதிகாரி ஒருவர், சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஆலோசனை சொன்னாராம்..

இந்த ஆலோசனையை அமைச்சரும் முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.. இது சம்பந்தமாக மற்ற துறை அதிகாரிகளிடமும் ஆஃப் தி ரெக்கார்ட் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது...
அப்போதுதான், இப்போதைக்கு லாக்டவுன் வேண்டாம் என்றும், ஒரு மாதம் கழித்து இதை பற்றி முடிவெடுக்கலாம் என்றும் முதல்வர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது..

ஆனால் தமிழக மக்களுக்கும் இதே கவலைதான் சூழ்ந்துள்ளது.. இப்போதுதான் ஒருவழியாக மீண்டு, வருமானத்துக்கு வழி தேட முற்படும் நிலையில், மறுபடியும் லாக்டவுன் என்றால், இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. அரசும் பொருளாதார ரீதியாக பலவீனமாகவே உள்ள நிலையில், லாக்டவுன் குறித்த கவலையும் தொற்றி கொண்டுள்ளது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக