செவ்வாய், 20 ஜூலை, 2021

பிட்காயின் 30,000 டாலருக்கு கீழ் சரிவு..! மேலும் சரியும் வாய்ப்பு?

tamil.goodreturns.in : கிரிப்டோகரன்சி ஆதிக்கத்தைக் குறைக உலக நாடுகள் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்தும், கிரிப்டோ உற்பத்தி முதல் வர்த்தகம் வரையில் அனைத்தும் தடை செய்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு சீனா கிரிப்டோகரன்சி-க்குப் போட்டியாக டிஜிட்டல் யுவான்-ஐ அறிமுகம் செய்து, இதன் வெற்றியில் கிரிப்டோ உற்பத்தி, வர்த்தகம், முதலீடு என அனைத்தையும் தடை செய்தது.
தற்போது ஐரோப்பாவும் சீனாவுக்குப் போட்டியாக டிஜிட்டல் யூரோ நாணயத்தை மக்களின் பயன்பாட்டுக்குச் சோதனை திட்டமாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த அறிவிப்பு கிரிப்டோ சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.
சீனாவின் தடை சீனாவில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி தடை செய்த பின்பு சந்தையில் பிட்காயின் சப்ளை குறைந்து அதன் விலை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில், பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.



பிட்காயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 30000 டாலருக்குக் கீழ் சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் எப்போதும் பல ஏற்ற இறக்கம் இருந்தாலும் முதல் முறையாக 5 சதவீதம் வரையில் சரிந்து 29,700 டாலர் வரையில் பிட்காயின் குறைந்துள்ளது

பிட்காயின் வளர்ச்சி செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக ஒரு பிட்காயின் விலை 29,306.77 டாலர் வரையில் குறைந்துள்ளது. இன்றைய சரிவின் மூலம் 2021ஆம் ஆண்டில் பிட்காயின் வளர்ச்சி அளவீடு 1.87 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பிட்காயின் கணிப்பு அதேபோல் இந்த வருடம் பிட்காயின் மதிப்பு 20000 டாலர் அளவிற்குக் குறையவும் வாய்ப்பு உள்ளது எனச் சிங்கப்பூர் நாட்டின் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான லூனோ நிறுவனத்தின் ஆசிய வர்த்தகப் பிரிவு தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய மத்திய வங்கி இன்றைய சரிவுக்கு மிக முக்கியக் காரணம் ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் யூரோ தான் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் எல் சால்வடோர் நாட்டில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தும் பெரிய அளவிலான தாக்கம் சந்தையில் ஏற்படவில்லை என்பதால் இதன் எதிர்காலம் இனி கேள்விக்குறி தான் என்கிற நிலை உருவாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக