வியாழன், 22 ஜூலை, 2021

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

kjl
நக்கீரன் செய்திப்பிரிவு :; முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. இவர் கடந்த தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்து கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக