திங்கள், 19 ஜூலை, 2021

13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்! நாவலப்பிட்டி மலையகத்தில்

May be an image of one or more people, people standing, outdoors and tree

Malayaga Kuruvi  : 13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்
நாவலப்பிட்டியில் 13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல் பொலிசார், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10 இடங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
சிறுமி 6 முதல் 7 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாவலப்பிட்டி, ஹரங்கல இலுக்தென்ன பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் அண்மையில் வெளியானது.
42 வயதான திருமணமான ஆசாமியொருவர் சிறுமியை அழைத்துச் சென்று, கற்குகை ஒன்றுக்குள் 4 நாட்களாக தடுத்து வைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டான்.


இதன்போது, வேறு பல நபர்களாலும் சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு உதவிய 6 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சில பொலிஸ் குழுக்கள் நியமித்துள்ளன. கடந்த 16 ஆம் திகதி, ஹரங்கல மற்றும் உதமங்கட பகுதிகளில் உள்ள புதர்கள் மற்றும் வீடுகளை ஆய்வு செய்தபோது, ​​இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் வந்து இடங்களை அடையாளம் காட்டினார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதான நபர், சிறுமியை கற்குகைக்குள் 4 நாட்கள் தங்க வைத்திருந்தார்.
சிறுமியை பல முறை நபர்கள் கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.
அப்படி அடையாளம் காணப்பட்ட இரண்டு கற்குகைகளிற்குள் ஆய்வு செய்த போது, படுக்கை விரிப்புக்கள், 50-60 வரையான பியர் ரின்கள் மீட்கப்பட்டன.
அந்த பகுதியிலுள்ள இளைஞன் ஒருவனால் முதலில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பிறிதொரு வீட்டிலும் துஷ்பிரயோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அடையாள அட்டை பெறுவதற்காக 600 ரூபா தேவைப்பட்ட போது, மாமா முறையான 43 வயதானவரிடம் சிறுமி பணம் கேட்டபோது, அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து விட்டு 1,000 ரூபா பணம் வழங்கியதாக சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களின் முன்னர், சிறுமியின் தாயார் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தந்தையினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அது பற்றி தாயாரிடம் சிறுமி கூறியுள்ளார். எனினும், தாயார் அதை கண்டுகொள்ளவில்லை.
32 வயதான ஒருவரால் பின்னர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதையும் பெற்றோர் அறிந்திருந்தனர். எனினும், அது பற்றியும் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.
சிறுமியை நாவலப்பிட்டி பொது மருத்துவமனையில் அனுமதித்தபோது நீண்ட காலமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் நான்கு பிரதான சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் சகாக்கள் தலைமறைவாக உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக