செவ்வாய், 22 ஜூன், 2021

சசிகலா நடராஜன் + ஜெயலலிதா + (பிரதமர்)சந்திரசேகரின் கூட்டு சதி! ஆட்சி கவிழ்ப்பு... தொடர்ந்து ராஜீவ் கொலை ....

May be an image of 2 people, people standing and indoor
நடராஜன் - (பிரதமர்)சந்திரசேகர் - ரவிசந்திரன் - தொழிலதிபர்

Deva  :  1990-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி கலைப்பு  மர்மம்...  திரை மறைவில் நடந்தது என்ன?
'அந்த திரை மறைவு நாடகம் எப்படி நடேந்தேறியது' என்பதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் கோவை தொழிலதிபரும், டெல்லி அரசியல் காய் நகர்தல்களில் சூத்தரதாரியுமான அய்யா சி.ஆர்.ரவிச்சந்திரன் அவர்கள்..   
இவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..
ஆனால் அவர் இன்னும் தமிழகத்தில்தான் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..
அந்த அரசியல் சாணக்கிய புலி இன்னும் இங்கு உறுமிக்கொண்டுதான் இருக்கிறது..
இங்கே வெளியிடப்பட்ட புகைப்படம் இதுவரை எந்த ஊடகத்திலும் வந்திருக்க வாய்ப்பில்லை. இன்றுதான் அவர் நமக்கு கையளித்தார்..
இந்த படத்தை பாருங்கள்.. அன்றைய ஒன்றிய பிரதமர் சந்திரசேகர் ஒரு சாதாரண அறையில் அமர்ந்திருக்கிறார்.  அவருக்கு இணையாக எம்.நடராஜன் (சசிகலா) casual-லாக  அமர்ந்திருக்கிறார்..  பின்னால் கைகட்டிக்கொண்டு இருப்பவர்தான் நம்மிடம் பேசிய கோவை தொழிலதிபர் சி.ஆர்.ரவிச்சந்திரன் அவர்கள்.. அவருக்கு பின்னால் இருப்பவர் கர்நாடக தொழிலதிபர்.  


சரி அன்று நடந்தது என்ன? அப்படியே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்..  
"சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி கலைஞரின் அரசை கலைப்பதற்கு ராஜீவும் ஜெயலலிதாவும் கூட்டு சேர்ந்து திட்டமிட்டதுதான். 'கலைஞர் வி.பி.சிங்குடன் நெருக்கமாக இருக்கிறார்' என்ற காரணமும் இத்துடன் சேர்ந்துகொண்டது..
ஆனால் அன்று  ஆட்சி கலைப்புக்கு திட்டமிட்டு சொல்லப்பட்ட காரணம்  'தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதற்கு தி.மு.க. ஊக்கமளிக்கிறது' என்று.
அதனை தொடர்ந்து  '#திமுக அரசு பிரிவினை சக்திகளுக்கு ஊக்கமளிப்பதால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என்பது போன்ற செய்திகள் பரபரப்பாக திட்டமிட்டே பரப்பப்பட்டன.
'பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசின் நடவடிக்கை தொடரும்' என அப்போதைய பிரதமர் சந்திரசேகர் நேரடியாக எச்சரிப்பதுபோல ஒரு நாடகமும் அரங்கேற்றப்பட்டது..
உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் பிரதமர் சந்திரசேகர், "இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமான உல்ஃபாவுக்கு தமிழ்நாட்டில் முகாம்கள் இருக்கிறது. தமிழக அரசுக்கு உளவுத்துறை வழங்கிய ரகசிய தகவல் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பப்பட்டது," என்ற ஒரு கற்பனை  குற்றசாட்டை சொல்லி  கலைஞர் தலைமையிலான  திமுக அரசை 30-01-1991  அன்று திட்டமிட்டே கலைத்தார்கள்...
அதன்பின் ஜெயலலிதாவின் விருப்பப்படி  1991 தேர்தலில் அதிமுக.  காங்கிரஸ் கூட்டணி அமைகிறது. எதிர்பாராத விதமாக ராஜீவும் கொல்லப்படுகிறார்.  அதன் பிறகு அதிமுக கூட்டணி வெற்றி கண்டதுதான் உங்களுக்கு தெரியுமே..
ஆட்சி கலைப்புக்காக சொல்லப்பட்ட இந்த காரணங்கள் எல்லாம் வெளியுலகுக்கு..
உண்மையான அரசியல் காரணம் எம்.நடராஜன் (சசிகலா) மூலம் ராஜீவ், மற்றும் பிரமர் சந்திரசேகர் ஆகியோருக்கு செல்வி.ஜெயலலிதா கொடுத்த திட்டமிட்ட அழுத்தமே...
இன்று அந்த நால்வரும் உயிரோடு இல்லை...  அன்று அந்த அறையில் நடந்த உரையாடல்களில் கலந்துகொண்டவன் என்ற முறையில்  நானே இன்று  வாழும் சாட்சியாக இருக்கிறேன்."
(விரைவில் இவரின் காணொளி பதிவை எதிர்பார்க்கலாம்.. இன்னும் பல திடுக்கிடும் அரசிய நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். அந்த பதிவுகளோடு உங்களை சந்திக்கிறோம்.)
*மேலே கூறிய கருத்துக்கள் முற்றிலும் கருத்து கூறியவரே முழு பொறுப்பாவார்.
- Media Team | Udhayanidhi Stalin Followers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக