வியாழன், 17 ஜூன், 2021

பெண் பக்தரை வைத்தே வீசிய வலையில் சிக்கிய சிவசங்கர் பாபா

 /tamil.oneindia.com - Veerakumar :  டெல்லி: பாலியல் சாமியார் சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து தமிழக போலீசாரால் எப்படி கைது செய்யப்பட்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உதவி செய்த பெண் பக்தராலேயே வளைத்து பிடிக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா
இந்த நிலையில்தான், டெல்லியில் உள்ள காசியாபாத் என்ற பகுதியில் சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் பாடி வாரண்ட் பெற்றுக்கொண்டு சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து வருவதற்கு காவல் துறை திட்டமிட்டுள்ளது.
பாலியல் சீண்டல் சில்மிஷ சாமியார், சிவ சங்கர் பாபா மீது அவர் நடத்தி வந்த சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்ததன் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம், சிவ சங்கர் உத்தரகாண்ட் மாநிலம் தப்பியோடிவிட்டதாக தகவல் கிடைத்தது. வெளி மாநிலங்களுக்கு போலீசார் செல்ல தேவையுள்ளதால் வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.



மருத்துவமனை டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவ சங்கர் பாபா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலி இருப்பதாக கூறி இப்படி போய் அவர் அட்மிட் ஆகிவிட்டார். எனவே, அவரை பிடித்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேரடியாக டேராடூன் சென்று விட்டார்கள். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

பள்ளி சென்ற சிபிசிஐடி இன்னொரு பக்கம் சுஷில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்துவதற்கு விரைந்தனர். அங்கு உள்ள அறைகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். மாணவிகளை எந்தெந்த ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றார்கள் என்ற விவரத்தை மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர். அந்தக் கோணத்தில் ஆசிரியர்களிடம் முதல் கட்ட விசாரணை தொடங்க திட்டமிட்டுள்ளனர் சிபிசிஐடி போலீசார்.

முதல் முறையாக பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக சிபிசிஐடி போலீசார் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றனராம். சிவசங்கர் பாபா அறையில் ஏதேனும் தடயங்கள் அல்லது ஆவணங்கள் கிடைக்குமா என்ற கோணத்தில் 7 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில்தான், டெல்லியில் உள்ள காசியாபாத் என்ற பகுதியில் சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் பாடி வாரண்ட் பெற்றுக்கொண்டு சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து வருவதற்கு காவல் துறை திட்டமிட்டுள்ளது. பாலியல் சேட்டை.. விரட்டிய சிபிசிஐடி.. டேராடூனிலிருந்து தப்பியோடி, டெல்லியில் சிக்கிய சிவ சங்கர் பாபாபாலியல் சேட்டை.. விரட்டிய சிபிசிஐடி.. டேராடூனிலிருந்து தப்பியோடி, டெல்லியில் சிக்கிய சிவ சங்கர் பாபா பாலியல் சீண்டல் பாலியல் சீண்டல் சில்மிஷ சாமியார், சிவ சங்கர் பாபா மீது அவர் நடத்தி வந்த சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்ததன் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதேநேரம், சிவ சங்கர் உத்தரகாண்ட் மாநிலம் தப்பியோடிவிட்டதாக தகவல் கிடைத்தது. வெளி மாநிலங்களுக்கு போலீசார் செல்ல தேவையுள்ளதால் வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.

டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவ சங்கர் பாபா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலி இருப்பதாக கூறி இப்படி போய் அவர் அட்மிட் ஆகிவிட்டார். எனவே, அவரை பிடித்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேரடியாக டேராடூன் சென்று விட்டார்கள். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

இன்னொரு பக்கம் சுஷில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்துவதற்கு விரைந்தனர். அங்கு உள்ள அறைகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். மாணவிகளை எந்தெந்த ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றார்கள் என்ற விவரத்தை மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர். அந்தக் கோணத்தில் ஆசிரியர்களிடம் முதல் கட்ட விசாரணை தொடங்க திட்டமிட்டுள்ளனர் சிபிசிஐடி போலீசார்.

முதல் முறையாக பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக சிபிசிஐடி போலீசார் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றனராம். சிவசங்கர் பாபா அறையில் ஏதேனும் தடயங்கள் அல்லது ஆவணங்கள் கிடைக்குமா என்ற கோணத்தில் 7 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. எப்படி கண்டுபிடித்தனர் எப்படி கண்டுபிடித்தனர் இதனிடையே டெல்லியில் சிவசங்கர் பாபா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து போலீசார் எப்படி அவரை கைது செய்தனர் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்த ஒரு பெண் பக்தரின் செல்போன் நம்பரை வைத்து சிவசங்கர் பாபா சிக்கியுள்ளார் என்கிறது காவல்துறை வட்டாரம்.
ர் சிவசங்கர் பாபா டேராடூன் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார் அல்லவா. அந்த மருத்துவமனையில் இவரை சேர்ப்பதற்கு உதவி செய்தது ஒரு பெண் பக்தர்தான். அங்கே அவர் தங்கியிருந்தபோது அனைத்து உதவிகளையும் செய்தது அவர்தான். காவல்துறையினர் டேராடூன் வருவதை அறிந்து கொண்டு எங்கே தப்பித்து ஓடலாம் என்று சிவசங்கர் பாபா யோசித்துக்கொண்டிருந்தார்.

டெல்லி வீடு தனது டெல்லி ஆசிரமம் அல்லது பிற பகுதிகளில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்று தங்கினால் கண்டிப்பாக காவல்துறைக்கு தெரிந்துவிடும். அங்கே கண்டிப்பாக விசாரணைக்கு வருவார்கள் என்பதை அறிந்து கொண்டு தனக்கு மருத்துவமனையில் உதவி செய்த அந்தப் பெண் பக்தரின் வீட்டில் சென்று தங்கி இருக்கிறார். அந்த பெண் வீடு தான், டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ளது

மண்டையிலிருந்த கொண்டை ஆனால் ஒரு திரைப்படத்தில் வரும் காமெடி காட்சி போல, "மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்." டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சேர்க்கப்பட்ட போது அந்த பெண் முகவரிதான் அங்கு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெண் பக்தர் அவ்வப்போது சிவசங்கர் பாபாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அந்த தொலைபேசி எண் தற்போது எந்த சிக்னல் பகுதியில் இருக்கிறது என்பதை சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்து காசியாபாத்தில் சிவசங்கர் பாபா மறைந்து இருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். உதவி செய்த பெண் பக்தராலேயே, கடைசியில் போலீசிடம் சிக்கிக் கொண்டு இருக்கிறார் சிவசங்கர் பாபா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக