வியாழன், 17 ஜூன், 2021

பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முழு விபர பட்டியல்

கலைஞர் செய்திகள் Vignesh Selvaraj :  : பிரதமர் மோடி உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரின் முன்வைத்த கோரிக்கைகள் குறித்துத் தெரிவித்தார்.
“கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடுக” - பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்!
 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் வலியுறுத்தினார்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமருடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.



பிரதமர் மோடியின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கவேண்டும்.

செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிஆதாரங்களை முழுமையாக வழங்கவேண்டும்.

ஜி.எஸ்.டி பாக்கித்தொகையை முழுமையாக அளிக்கவேண்டும்.

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்.

மேகதாது அணைக்கான அனுமதியை ரத்து செய்யவேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.

கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணவேண்டும்.

கச்சத்தீவை மீட்கவேண்டும்.

புதிய மின்சார சட்டம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக அமைக்கவேண்டும்.

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்.

ஜவுளி பூங்காங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அறிவிக்கப்பட்ட பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.

புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும்.

நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிட வேண்டும்.

சென்னை மெட்ரோ இரண்டாம் திட்டத்தை தொடங்கிட வேண்டும்.

ஈழத்தில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும்.

உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

இட ஒதுக்கீடு எனப்படும் சமூக நீதி அளவுகோலை மாநிலங்களே நிர்ணயித்துக்கொள்ள உரிமை அளிக்கவேண்டும்.

சேது சமுத்திர திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

பல்வேறு நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றவேண்டும்,

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

குடியுரிமைச் சட்டங்கள், மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

- என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக