வெள்ளி, 18 ஜூன், 2021

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி..

 Shyamsundar  -  tamil.oneindia.com :  சென்னை: செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில்தான் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார். அங்கு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இவர் அத்துமீறியதாக புகார் வைக்கப்பட்டது.
இவர் டெல்லிக்கு தப்பி ஓடி ஒளிந்திருந்த நிலையில் போக்சோ சட்டத்தில் தமிழ்நாடு சிபிசிஐடி நேற்று அவரை கைது செய்தது.
இவர் மாணவிகளிடம் தவறாக பேசிய வீடியோ மற்றும் ஆடியோவும் வைரலானது. பல்வேறு மாணவிகளிடம் இவர் தவறாக பேசிய ஆதாரங்கள் வெளியானது. டேராடூனில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை முடிந்த பின் டெல்லிக்கு தப்பி ஓடினார்.


போலீசார் இதையடுத்து போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட இவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஜூலை 1-ந் தேதி வரை காவலில் இருக்க வேண்டும்

உடல்நிலை இந்த நிலையில் இன்று காலை திடீரென இவர் உடல்நிலை மோசமானது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். இதையடுத்து சில நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உடல்நிலையை காரணமாக காட்டி ஜாமீன் பெற விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் பரிந்துரையை காரணம் காட்டி பெயிலுக்கு இவர் விண்ணப்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக