ஞாயிறு, 20 ஜூன், 2021

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் கைது! பாலியல் புகார்...

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் கைது!
May be an image of 1 person and text that says 'BREAKING NEWS SUN NES NEWS முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது! நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது! ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை என தகவல்! ÛSNAIL SNNEWSTAMIL SUNNEWS sunnewslive. BREAKING 20JUN2021'

நக்கீரன் செய்திப்பிரிவு துணை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம்  செய்துகொள்வதாக ஏமாற்றியது, பாலியல் வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு மற்றும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக துணை நடிகை  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது  போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக மணிகண்டனை தேடி வந்தனர். முன்னதாக மணிகண்டன் தலைமறைவான நிலையில் அவரது உதவியாளர்களும் நேற்று தலைமறைவாகினர். இந்த வழக்கில் மணிகண்டன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது...

.. இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தற்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார் தற்பொழுது எங்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கின்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக