திங்கள், 14 ஜூன், 2021

டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் பாஜக!

டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் பாஜக!

 minnambalam : நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கு முன்பு  முற்றுகை போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இன்று (ஜூன் 13) வெளியிடப்பட்டன.  இதனிடையே டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் இன்று தங்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர்  எல்.முருகன் கலந்து கொண்டார்.

பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் தங்கள் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர், நாளை டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் உளவுத்துறை போலீசாருக்கு சென்ற நிலையில், நாளை போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக