சனி, 19 ஜூன், 2021

சிறையில் நளினி எழுதிய ... அந்த ஏழுபேர் பற்றிய முகநூல் லீக்ஸ்

May be an image of 1 person, flower and text

நெற்றிக்கண் மனோஹரன் : சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார் என ஏக அலப்பறைகள்,  அவள் எழுதியதெல்லாம் உண்மையாம்
அதில் முருகன் வெளிநாடு செல்ல இந்தியா வந்ததாகவும், சிவராசனை ஒரு ஏஜன்ட் என்ற முறையில் சந்தித்ததாகவும், இன்னும் ஏராளமான பொய்மூட்டைகளை அவிழ்த்திருக்கின்றார்
இன்னொரு இடத்தில் பேரரிவாளனை காப்பாற்ற இவர் சொல்லியிருக்கும் ஒரு பொய், இவரது புத்தகத்தை அப்படியே தூக்கி தூர எறிய வைக்கின்றது
அதாவது பேரரிவாளனும் புகைப்பட கலைஞனாம், அவனும் ஹரிபாபு போலவே குற்றமில்லாதவனாம், இதில்தான் வசமாக சிக்குகின்றார் நளினி
பேரரிவாளன் சிறுவயது முதல் புலி தொடர்பு உள்ளவர் என்பதும், அவர் புலிகளுடன் நேரடியாக பழகியவர் என்பதும் ரகசியம் அல்ல, நிரூபிக்கபட்ட விஷயம்.
பத்மநாபா கொலைக்கு சிவராசன் தமிழகம் வரும்போதும் இதே பேரரிவாளன் உதவியிருக்கின்றார், அதன் பின்புதான் சிவராசனுக்கு பைக் வாங்க உதவுதல், வயர்லெஸ் இயக்க கார் பேட்டரி வாங்க உதவுதல் என அவரின் வலது கரமாகவே மாறி இருந்தார்.


நமது ராணுவத்தை எதிர்த்து நமது சென்னை மண்ணிலே சாத்தானின் படைகள் எனும் புத்தகத்தை புலிகளுக்கு துணையாக அச்சடித்த தேச துரோக கும்பலில் ஒருவர்தான் இந்த பேரரிவாளன்
நளினியின் சகோதரர் எல்லாம் அக்கும்பலே, தேச துரோக கும்பல்.
செத்துபோன ஹரிபாபு காரியம் முடிந்தவுடன் யாழ்பாணம் தப்ப இருந்ததும், அவன் 6 மாத காலம் புலிகளுடன் தொடர்பில் இருந்ததும் அவன் காதலி சுந்தரி என்பவள் எழுதிய கடிதங்களிலே தெரிகின்றது, அவள் எச்சரித்த வரிகள் ஹரிபாபுவிற்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பினை நிருபிக்கின்றன‌
இந்த நளியின் சகோதரர் பாக்யநாதன், ஹரிபாபு இவர்களின் முதலாளி  ஸ்டூடியோ அதிபர்தான் தூக்கிலடவேண்டிய குற்றவாளி, ஆனால் மனிதர் இவர்கள் மூலமாக தொடர்புகளை கொண்டதால் அவர் தப்பினார்
அந்த ஸ்டூடியோ அதிபரை பற்றி ஒருவார்த்தையும் நளினி சொல்லவில்லை
புலிகள் செய்த பெரும் பிழை ராஜிவ் கொலையினை படம் எடுத்தது, அதுதான் மறுநாள் எல்லா பத்திரிகையிலும் வருமே என்ற அடிப்படை அறிவுகூடவா இல்லை, இருந்தது.
 பின் எதற்கு படமெடுத்தார்கள்?
எல்லா குண்டுவெடிப்புகளையும் படமெடுத்து அது வெடித்த சக்தி என்ன? எத்தனை பேர் செத்தார்கள்? எப்படி எல்லாம் சிதறி செத்தார்கள் என ரசிப்பதில் புலிகளின் ஆனந்தம் அப்படி
(கிட்டதட்ட 10,000 புகைபடங்களை அப்படி பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து கைபற்றியதாக சிங்கள தளபதி சமீபத்தில் சொன்னது நினைவிருக்கலாம்)
அப்படி ஒரு கொடூரமான ரசனை புலிகளிடம் இருந்திருக்கின்றது.
அதுவும் ராஜிவ் என்பது அவர்களின் பெரும் குறி, அவர் சிதறி சாவதை பார்க்க அப்படி ஒரு ஆனந்தம்.
(அந்த தற்காலிக சந்தோஷம் தான் பின்னாளில் புலிகளை அழித்து தெருவில் போட்டது)
பாதுகாப்பான தூரத்தில் படமெடுத்த ஹரிபாபு, கூட்ட நெரிசலில் முன் தள்ளபட்டு இறந்தான்.
ஆக ஹரிபாபு அப்பாவி, பேரரிவாளன் அப்பாவி என புலம்புகின்றார் நளினி
இன்னொரு விஷயம் நளினி மேலான நம்பக தன்மையினை அப்படியே உடைக்கின்றது.
அதாவது கர்ப்பம் கலைக்க சொல்லி அடித்தார்களாம், இவரை சித்திரவதை எல்லாம் செய்தார்களாம்
கைதான பின்புதான் அவர் கர்ப்பமானது உறுதிபடுத்தபட்டது. ஒரு சிறிய அதிர்வோ, அல்லது மெல்லிய தாக்குதலோ கூட அக் கருவினை கலைய செய்யும் என்பது தெரியாததல்ல‌
ஆனால் பத்துமாதம் அவளை சிறையில் பராமரித்திருக்கின்றார்கள்,  விசாரணை நடந்தாலும் வேளா வேளைக்கு மருத்துவ சோதனை எல்லாம் செய்து அவள் சுகமாக குழந்தையும் பெற்று அதுவும் கொஞ்சநாள் சிறையிலே வளர்ந்திருக்கின்றது
கவனியுங்கள் இவர் எழுதியிருப்பது போல சித்திரவதை , கண்ணீர் அடி உதை என்றால் கர்ப்பம் தங்கி இருக்குமா?
இன்னொன்று தாய் அழுதுகொண்டே இருந்தால் கர்பத்து குழந்தை மனபாதிப்புடனோ அல்லது வளரும் போது தாய் அடிவாங்குவதை பார்த்து வளர்ந்தால் ஒரு மாதிரி மன கிலேசத்தில் வளரும் என்பது இயற்கை
ஆனால் நளினி மகள் இதோ மருத்துவராகி இருக்கின்றார் எப்படி?
சிறையில் மிக நல்லமுறையிலேதான் நளினியினை கவனித்திருக்கின்றார்கள் இல்லை என்றால் இதெல்லாம் எப்படி சாத்தியம்?
ஆக பல விஷயங்களை மறைக்கின்றார் நளினி
இன்னும் யாரையோ நம்பி பொய்மேல் பொய் சொல்லிகொண்டிருந்தால் தன் தலையிலே மண் அள்ளிபோடுகின்றார் என்றே அர்த்தம்.
ராஜிவ் மீது நடந்தது ஒரு பேடித்தனமான பொட்டைத்தனமான தாக்குதல்
எங்கோ இருந்து ஒரு பெண்ணின் மீது குண்டை கட்டி அனுப்பி, அதுவும் ஒரு பெண் காவலர் தடுத்தும், ராஜிவே அழைத்து தன்னை கபடமின்றி கொல்ல அனுமதித்த நிகழ்வு அது
அப்படி பெண்ணை வைத்து படுகொலை செய்தவர்கள்தான், இன்று நளினி, அற்புதம்மாள் என பெண்களை அழ வைத்து அனுதாபமும் அரசியலும் செய்கின்றார்கள்
இதுவா ஆண்மை? இதுவா வீரம்? சீ சீ பெரும் அவமானம்
இன்னும் தங்கள் குற்றத்தை ஒப்புகொள்ளாத நளினியும் , பேரரிவாளனும் இத்தேசத்தின் அவமானங்கள்
16 வயதில் தன் மகன் என்ன செய்தான் என்பதை அறியாதவரல்ல அற்புதம்மாள், அதை மீறி பொய் சொல்லிகொண்டிருக்கின்றார்
தன் மகன் யாருடன் சுற்றுகின்றான், எங்கே செல்கின்றான் என அறிந்தும் அதையெல்லாம் மறைத்து இப்பொழுது நாடகாமாடும் அற்புதம்மாளை முதலில் உள்ளேதள்ள வேண்டும்
இல்லை கலைமாமணி , தாதா சாகேப் பால்கே போன்ற நடிப்புக்கான சிறந்த விருதை அவருக்கு கொடுக்கலாம், அம்மணி போல் இன்னொரு நடிகை இந்த நூற்றாண்டிலே இல்லை
நெற்றிக்கண் மனோஹரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக