வியாழன், 3 ஜூன், 2021

திமுக எதிர்ப்பையும் கலைஞர் எதிர்ப்பையும் கட்டி எழுப்பியது (புலி ஆதரவு) பெரியார் இயக்கங்களே!

May be an image of 1 person
Manoj Kumar :கண்டத ஒலறாதீங்கடா !! எவனோ நாலு ஈழத்தமிழர் கிறுக்கனுக திமுக எதிர்ப்பு பேசுனா,எதுக்குடா ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் இழுக்கறீங்க ??
அப்படினா தமிழ்நாட்ல இருக்கற பல ஆயிரம் பேர் கூட திமுக எதிர்ப்பு பேசீட்டு இருக்காங்க,,,அதுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் எதிரினு டிக்லர் பண்ணுவீங்களா ??
அதுலயும் எவ்வளவு வன்மம் பாருங்க,,,சிலோன் தமிழர்களாம் !!
எத்தனை ஆயிரம் உயிர்கள் ஈழம் என்ற அடையாளத்திற்காக போராடியிருப்பார்கள் ??
ஆனால் அவர்களை சிலோன் தமிழர்கள் என சிங்களத்திடம் ஒப்படைப்பதில் அப்படி என்ன சந்தோசம் ?? ஆதரவு மனநிலையில் இருப்பவர்களை கூட எதிர் பக்கம் தள்ளி விடுவது தான் இது போன்ற கோமாளிகளின் வேலை !!

செல்லபுரம் வள்ளியம்மை : இலங்கை தமிழர்கள் எல்லோரும் திமுகவுக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்வது இந்த அஷோக் போன்ற ஐ டிகளின் தொழில்
அதற்கு தேவையான ஒரு விளம்பரமாகத்தான் இந்த அடாவடி குரூப் ஈழத்தமிழர்களை பயன்படுத்துக்கிறது
இவர்கள் உண்மை நேர்மை ஏதாவது கொஞ்சமாவது இருந்தால் இவர்கள் முதலில் புலிகளை அளவு கணக்கிலெல்லாமல் கொம்பு சீவிவிட்டு தங்கள் அரசியலை நடத்திய பெரியார் இயக்கங்களை அல்லவா முதலில் திருத்த வேண்டும்?
பெரியார் இயக்கங்களும் திராவிட இயக்கங்களும்தானே சீமான்களை உருவாக்கிய பிதாமகர்கள்?
இன்னும் கூட திமுகவிலேயே எக்கச்சக்கமான புலி ஆதரவாளர்கள் இருக்கிறார்களே?
புலியின் சகோதர படுகொலைகளை விமர்சித்தால் பல திமுக தொண்டர்களுக்கும் சில தலைவர்களுக்கும் கூட வேப்பங்காயாக இருக்கிறதே?
இல்லையென்று கூற முடியுமா? பெயர் விபரங்களும் தேவையா?
யாரவது ஒரு ஈழத்தமிழர் திமுக ஆதரவாளராக இருந்துவிட்டால்,
இவர்களுக்கு வருமே ஒரு கோபம் ..... ? அளவு கடந்தது .
இங்கேதான்  இவர்கள் ஒழிந்து கொண்டு இருக்கிறார்கள்
திமுகவுக்கு எதிராக இருக்கும் புலி ஆதரவாளர்களை சமாளிக்கிறேன் என்பதுதான் இவர்களின் தொழில்.


அந்த தொழில் தற்போது மவுசு குறைந்து கொண்டு போகிறது
வருமானத்தை ஊடக வெளிச்சத்தை தக்க வைத்து கொள்ளவேண்டுமே?
இப்படி எதாவது புதிப்பித்து கொண்டே இருக்கவேண்டிய கேவல நிலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் இவர்கள் .
இதே வியாதி முன்பு பிரபாகரனுக்கும் இருந்தது  சதா புதிது புதிதாக எதிரிகளை உற்பத்தி செய்துகொண்டே இருப்பது  அதன் மூலமே தன்னை தக்கவைத்து கொள்ள முடியும் என்று நம்பும் ஒரு மன நோய்    
இவர்களுக்கு ஒரு நேர்மையான அறிவுரை ..
. முதலில் உங்கள் பெரியார் அமைப்புக்களும் ஏராளமான திமுக தொண்டர்களுக்கும் இருக்கும் புலி மயக்கத்தை தீருங்கள் ஆரிய மாயையை விட பாசிச மாயை கொடுமையானது .
இந்த இரண்டையும் விட உங்களை போன்ற ஊடக வியாபாரிகளின் விளம்பர மாயை இன்னும் மோசமானது 

Devamathi Venkatesh : கொஞ்சம் தலைவர் தளபதி டைம் லைன்ல பாருங்க கொலைக்கிற அஃறிணைகள்ல பெரும்பாலும் ஈழத்தை காரணமாக கொண்டே மிகவும் அருவருப்பாக பின்னூட்டம் இடுகின்றன .

ஈழ தமிழர்களிடையே திமுக எதிர்ப்பையும் கலைஞர் எதிர்ப்பையும் கட்டி எழுப்பியது புலி ஆதரவு பெரியார் இயக்கங்களே  
இவர்கள் . புலிகளின் அத்தனை அக்கிரமங்களையும் இன்றுவரை போற்றி புகழ்கிறவர்கள்தான்
பாசிசத்தை வளர்த்தால் பாயாசமா வளரும்? பாசிசம்தான் வளரும் .
அந்த பாசிச மயக்கத்தில் தோல்வி அடைந்தவர்கள் பிதற்றுகிறார்கள்  
ஆனால் இன்றுவரை அதே பாசிசத்தை தானே பெரியார் இயக்கங்கள் போற்றி மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களை புலி படுகுழிக்குள் தள்ளுகிறார்கள்?
இவர்கள் என்றாவது ஒரு நாள் புலிகளால்தான் ஈழபோராடடம் தோல்வி அடைந்தது சகோதர போராளிகளை கொன்று அத்தனை அழுவுக்கும் காரணம் புலிகள்தான் என்று கூறியிருக்கிறார்களா?
கலைஞரை தவிர அத்தனை தமிழக தலைவர்களும் புலிகளை கொம்பு சீவி விட்டவர்கள்தானே?  
ஈழத்தமிழர்களின் அத்தனை துன்பத்திற்கும் புலிகள் மட்டுமே காரணமல்ல,
 புலிகளை உசுப்பேத்தி அதில் தங்கள் அரசியலை நடத்திய தமிழக தலைவர்களும் ஊடகங்களும் கூட மிக முக்கிய காரணம்தான்
புலிகளால் வீசிய எறியப்படும் வார்த்தைகள் உங்களுக்கு சுடுகிறதே  அவர்கள் துப்பாக்கிகளால் சகோதர்களை சுட்டு கொன்றார்களே ?
இதை தட்டி எப்போதாவது கேட்டு இருக்கிறீர்களா>?
கலைஞர் கேட்டார்!  

1 கருத்து: