செவ்வாய், 8 ஜூன், 2021

ஊழல் அதிகாரிக்கு பதவி! கோட்டையில் கொடிகட்டும் முன்னாள் தலைமைச் செயலாளர்!

ias
ias
nakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் - ஸ்டாலின் சமீபத்தில் பத்திரப்பதிவுத் துறைசெயலாளராக நியமிக்கப்பட்டவர் ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ். இவர் எடப்பாடி ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி.யாக அதே துறையில் பணிபுரிந்தார். அப்பொழுது அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்தன. ஒருகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், பத்திரப்பதிவுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளையும் அ.தி.மு.க. அரசின் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி..வீரமணியையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான 20 கிரவுண்டு நிலம் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அதை வாரியம் உபயோகிக்கவில்லை. கட்டாந்தரையாக இருந்த அந்த நிலத்திற்குரிய நிவாரணம் நில உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. அரசு கைப்பற்றிய நிலத்தை ஐந்து வருடங்கள் அரசு உபயோகிக்காமல் வைத்திருந்தால் அதை, அரசுக்கு கொடுத்த நில உரிமையாளர் திரும்பப் பெறலாம் என ஒரு விதி உள்ளது. அதையும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம்தான் பெறமுடியும். அரசு கொடுத்த சொத்து தொகையான நிவாரணத்தை திருப்பிச் செலுத்தினால் போதும்.அந்த வகையில் ஒரிஜினல் நில உரிமையாளர் பெயரில் ஒரு போலி நில உரிமையாளர் உருவாக்கப்பட்டார். அவர் கோர்ட்டுக்குப் போனார். கோர்ட் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அரசு நிலம் அவர் கைக்குப் போனது. அவரிடம் போன நிலம் அடுத்தநாளே அன்றைய அமைச்சர் வேலுமணிக்கு மிக மிக வேண்டியவரான கோவையைச் சேர்ந்த முக்கிய பினாமி பெயருக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வேலைகளைப் பார்த்த தெல்லாம் ஜோதிநிர்மலா சாமி என்பதுதான் குற்றச்சாட்டு.,,,,,ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் ஒரு மாவட்ட பதிவாளரும் ஜோதி நிர்மலா சாமியால் தூக்கியெறியப்பட்டது சம்பந்தமான இன்னொரு அதிர்ச்சி சம்பவத்தையும் கோட்டைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிநிர்மலா, எடப்பாடி அரசில் சர்வ அதிகாரம் பொருந்தியவராக இருந்த தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு நன்கு அறிமுகமானவர். சண்முகம் கேட்டுக் கொண்டதற்காக பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வில்லங்கம் நிறைந்த பல நிலங்களை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பதிவு செய்து தந்தார் ஜோதிநிர்மலா. சண்முகத்திற்கு நெருக்கமான பில்டரின் விருகம்பாக்கத்தில் உள்ள நிலத்தை ஜோதி நிர்மலா பதிவு செய்ய, அப்பா... சாமி... என அந்த பில்டர் பெருமூச்சுவிட்டார். அந்த நன்றிக்காக சண் முகம் எதை வேண்டுமென்றாலும் செய்வார்.

அந்த வகையில்தான், முதல்வர் எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் நெருக்கமான கட்டுமான நிறுவனம் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்புள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிலத்தை விழுங்க நினைத்தது. அந்த அசைன்மென்ட் சண்முகத்தால் ஜோதிநிர்மலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை உடனடியாக போலியான ஒரு நபர் பெயரில் கோர்ட் ஆர்டர் வாங்கினார் ஜோதி நிர்மலா. அதைப்போல உரிமையாளர் பெயரில் பதிவு செய்யச் சொன்ன நிர்மலாவின் உத்தரவை ஏற்க மறுத்தார் அண்ணாநகர் மாவட்ட சார்பதிவாளர். அவரை தூத்துக்குடிக்கு தூக்கியடித்தார்.
iraianbu

velumani

இந்த விவகாரம் வெளியே வந்தது. உடனே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அண்ணாநகர் சார்பதிவாளருக்கும் போலி உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. வீட்டுவசதி வாரியத்துறை செயலாளராக இருந்த ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் எடுத்த நடவடிக்கை சரிதான் என அமைச்சர் ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும், தலைமைச் செயலாளர் சண்முகமும் சேர்ந்து, ராஜேஷ் லக்கானியை ஆவணக் காப்பகத்துக்கு தூக்கியடித்தனர் என ஜோதிநிர்மலாவின் பராக்கிரமங்களை விளக்குகிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பவர்புல்லாக இருந்த தலைமைச் செயலாளர் சண்முகம், ராஜேஷ் லக்கானிக்குப் பதில் கார்த்திகேயனை வீட்டுவசதி வாரிய செயலாளராகக் கொண்டு வந்தார். அவர் வந்தவுடன் கோயம்பேடு நிலம் கை மாறியது.

இந்த ஆட்சியிலும் வெயிட்டான பத்திரப் பதிவுத் துறையின் செயலர் பதவியைப் ஜோதி நிர்மலா, பெற்றுவிட்டார். பொதுவாக ஐ.ஏ.எஸ். நியமனங்களில் தலையிடாதவர் என்று பெயரெடுத்தவர் இன்றைய தலைமைச் செயலாளர் இறையன்பு. தி.மு.க அரசின் தொடக்க கட்ட விறுவிறு செயல்பாடுகளுக்கு இறையன்பு பக்கபலமாக உள்ள நிலையில், ஜோதிநிர்மலா சாமி நியமனம், கோட்டை வட்டாரத்தில் தேவையற்ற சலசலப்புகளை உருவாக்கி வருகிறது.

கருத்துகள் இல்லை: