செவ்வாய், 1 ஜூன், 2021

தமிழ்நாடு அரசின் நியாயவிலை கடை நிவாரணத்தை பாராட்டிய நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி

“நியாய விலைக் கடைகளில் நிவாரண நிதி வழங்குவது பாராட்டுக்குரியது”: தமிழக அரசுக்கு அபிஜித் பானர்ஜி பாராட்டு!

கலைஞர் செய்திகள் : ஏழை, எளிய மக்கள் உடனடியாகப் பயன்பெறும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் நிவாரண நிதி அளிப்பது பாராட்டத்தக்க முயற்சி என்று பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கருத்து வருமாறு :-
கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதனால் கட்டுமானம், சிறிய அளவிலான சில்லறை வணிகம் போன்ற சில முக்கியமான துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
கட்டுமானத் துறையானது கடன்களைப் பெறுவதன் மூலமாக தன்னை மீட்டெடுத்துக் கொண்டுமேலே எழுந்திட முடியும்.
ஆனால், பொது முடக்கத்தால் பேருந்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இத்தகைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பணத்தை அவர்களது கைகளிலேயே கொண்டு போய்ச் சேர்ப்பதே சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் முழு பொது முடக்கக் காலத்தில் நியாய விலைக் கடை களின் மூலம் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.



இதன்மூலம், அனைத்து குடும்பத்தினருக்கும் நேரடியாக ரொக்கத் தொகை அவர்களது கைகளில் போய்ச் சேரும். உடனடியாக அவர்களும் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அபிஜித் பானர்ஜி தெரிவித் துள்ளார்.

அபிஜித் பானர்ஜி இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளியலாளர் ஆவார். இவர் மாசாச்சூ செட்சு தொழில்நுட்பக் கழகத்தில் போர்டு அறக்கட்டளையின் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கு 2019ம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருடன் இணைந்து வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக