வெள்ளி, 18 ஜூன், 2021

புலியா, பூதமா? திமுக - நாதக குழு மோதல்!.. அரக்கர்கள் ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளா ?

abas  Karthikeyan Fastura  :   அரக்கர்கள் ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளா ?
நிச்சயமாக இல்லை. அவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் சமூகநீதியால் பலன் அடைந்தவர்கள். தான் போராடி பெற்றவைகளை அடுத்த தலைமுறையினர் எளிதாக கிடைக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார்கள்.
அவர்களிடம் இரண்டு பிரச்சினைகள் உள்ளன
1. புதிய நடுத்தர வர்க்க சிந்தனை: தன்னுடைய சூழலிலிருந்து சமூகத்தை பார்ப்பது, தன்னுடைய நலனை முதலில் வைத்து சமூகத்திற்கான தீர்வை முன்வைப்பது இந்த சிந்தனை முறையின் குணமாக இருக்கிறது. தோழர் மனோஜ் ஒரு பதிவில் குறிப்பிட்டது போல் சோறு சோறு சுகம் சுகம் பணம் பணம் இதைத்தாண்டி உரிமை, போராட்டம், விடுதலையுணர்வு போன்றவற்றை சிந்திக்கும் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
2. இவர்கள் அடைந்த பலன்கள் அனைத்திற்கும் திமுக (கலைஞர்) மட்டுமே காரணம் என்று நம்புகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் பெரியார் இளைஞர்கள் மத்தியில் ட்ரண்ட் ஆகாமல் போயிருந்தால் இவர்களுக்கு பெரியார் கூட தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆணி தான். பெரியாரை நடைமுறைக்கு ஒத்துவராத ஆள் என்று பர்னிச்சர் உடைக்க கிளம்பி இருப்பார்கள்.
இவர்களுக்கு நீட்டோ அனிதாவின் மரணமோ கூட பிரச்சினை இல்லை. அது அதிமுக ஆட்சியில் திணிக்கப்பட்டது தான் பிரச்சினை. ஒருவேளை திமுக ஆட்சியில் திணிக்கப்பட்டிருந்தால் நீட் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ சீட்டுக்களை தமிழர்கள் கைப்பற்ற வேண்டும். அதற்காக தமிழ்நாடு முழுவதும் நீட் பயிற்சி மையங்களை தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும் என்று உருட்டி இருப்பார்கள். (போராட்டம் என்றால் அவ்வளவு அலர்ஜி)
டான் அசோக் போன்ற எச்சக் கூலிகளை அடிப்பது வேறு.
அதேவேளை அந்த இளைஞர்களை ஒரேடியாக ஆர்எஸ்எஸ் கைக்கூலிகள் என்று முத்திரை குத்துவதை விட்டு அவர்களுடன் நாம் உரையாட வேண்டியுள்ளது.
நண்பர் Jasem Fathi பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக