திங்கள், 21 ஜூன், 2021

டெல்லி டாக்டர் வீட்டில் பெட்டி பெட்டியாக சிக்கிய போலி கொரோனா ஊசி மருந்துகள்

 மாலைமலர் :பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளில் பெரும்பாலான மருந்துகள், கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும்.
புதுடெல்லி:  .டெல்லி கொரோனா சிகிச்சைக்கான போலி மருந்துகளை விற்பனை செய்வதாக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு புகார் வந்தது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நிஜாமுதீன் மேற்கு பகுதியில் உள்ள டாக்டர் அல்டாமஸ் உசைன் என்பவரின் வீட்டில் போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அந்த வீட்டீல் சோதனையிட்டனர். அப்போது, அங்கு பெட்டி பெட்டியாக போலி மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 3293 குப்பி போலி மருந்துகளை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக 2 டாக்டர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.



பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளில் பெரும்பாலான மருந்துகள், கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும். சில மருந்துகள் ரெம்டெசிவிர் மருந்துகள். சில மருந்துகளின் காலாவதி தேதி முடிந்திருந்தது என குற்றப்பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

இந்த கும்பல், 400க்கும் மேற்பட்ட போலி ஊசி மருந்துகளை, அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட டாக்டர்களின் மருத்துவப்படிப்பு சான்றிதழ்களையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக