புதன், 16 ஜூன், 2021

தமிழ்நாட்டுக்கு 3,691 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய அரசு!

 நக்கீரன் : தமிழ்நாட்டுக்கு 3,691 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய  அரசு!
இது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பில், "ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டை ரூபாய் 3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
நீர்வள  அமைச்சகத்தின் 'தேசிய ஜல் ஜீவன் திட்டம்' தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூபாய் 614.35 கோடியை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு இந்நீர் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஒன்றிய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங், 2024- ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழ்நாட்டுக்கு  முழு உதவியும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில்  மொத்தம் உள்ள 1.26 வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில்  இன்னும் 86.53 லட்சம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன.இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும். 2024- ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணியை முடிக்க, கிராமங்கங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழ்நாடு ம் 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
 
இந்தாண்டுக்கான செயல் திட்டத்தை தமிழ்நாடு  இன்னும் இறுதி செய்யவில்லை. இதை தாமதிக்காமல் இறுதி செய்யும்படி தமிழ்நாடு  அரசை தேசிய ஜல் ஜீவன் திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் அமல்படுத்தும் பணியை விரைவுபடுத்தும்படி தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒன்றிய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்." இவ்வாறு ஒன்றிய  அரசின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020- 2021- ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ரூபாய் 921.99 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக