செவ்வாய், 22 ஜூன், 2021

தமிழ்நாட்டில் 15 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி மறுப்பு- தங்கம் தென்னரசு

 Veerakumar -  tamil.oneindia.com : சென்னை: தமிழகத்தில் மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்க அனுமதியில்லை, என்றும், 15 இடங்களில் எண்ணெய் கிணறு தோண்ட கோரிய ஓஎன்ஜிசி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அரியலூரில் 10 இடங்களிலும், கடலூரில் 5 இடங்களிலும் எண்ணெய்கிணறு அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது ஓஎன்ஜிசி.
15 இடங்களில் எண்ணெய் கிணறு இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தங்கம் தென்னரசு இன்று உரையாற்றியபோது,
15 இடங்களில் எண்ணெய்கிணறு அமைக்க அரசிடம் அனுமதி கேட்ட ஓஎன்ஜிசியின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், நேற்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இந்த முடிவை எடுத்ததாகவும், அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தெரிவித்தார்.



சுற்றுச் சூழல் குழு ஓஎன்ஜிசி விண்ணப்பங்களை தமிழ்நாடு சுற்றுச்சூழல் குழுவும் நிராகரித்து விட்டது. தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி தரப்படாது. தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதியில்லை. 5 மாவட்டங்களுக்கு வெளியே ஹைட்ரோகார்பன் திட்டங்கள் வந்தால் வல்லுநர் குழு மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யும்.
இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும். இக்குழு சுற்றுச்சூழல் மண் உள்ளிட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களுக்கெதிரான ஆய்வறிக்கை கொடுக்கும்.

சிமெண்ட் விலை குறைப்பு சிமெண்ட் மற்றும் இரும்பு போன்ற கட்டுமான பொருட்களின் விலையை மேலும் குறைக்க அதன் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக