வெள்ளி, 25 ஜூன், 2021

அமெரிக்காவில் சீட்டுக்கட்டு போல சரிந்த 12 மாடி குடியிருப்பு - இடிபாடுகளில் சிக்கிய 99 பேர் மீட்பு

 Jeyalakshmi C  - ://tamil.oneindia.com :  மியாமி: அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன.
தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர
3வது மாடி ஜன்னலில் இருந்து அலறல்.. மிரண்டு போன மக்கள்.. துணிந்த 3 பேர்..
அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கவே மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டது.
முதல் கட்டமாக அவர்கள் 12 வயது சிறுவன் உள்பட 99க்கும் மேற்பட்டோரை மீட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


செய்தியாளர்களிடம் பேசிய மியாமி-டேட் தீயணைப்புத் தலைவர் ஆலன் கொமின்ஸ்கி, இரவு முழுவதும் மீட்புப்பணிகள் நடைபெற்றதாகவும் வெள்ளிக்கிழமைகளில் குழுவினர் பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக