சனி, 1 மே, 2021

மம்மூட்டியின் ONE கடைக்கால் சந்திரன் பினராயி விஜயன் அல்ல! எம் கே ஸ்டாலின்?

மம்மூட்டி நடித்த  ஓன் என்ற மலையாளப்படத்தை பார்த்தேன்  கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் உண்மை கதை என்பது போல சில ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார்கள்   தோழர் மதிமாறன் இது ஸ்டாலின் பற்றிய படம் போல் தெரிவதாகவும் குறிப்பிட்டிருந்தார்
உண்மைதான் இது ஸ்டாலினை மனதில் வைத்து கொண்டு உருவான படம் போலத்தான் தெரிகிறது.
மம்மூட்டியின் உடல் மொழி முகபாவம் மற்றும் ஆடைகள் போன்றவை மட்டுமல்ல மாமூட்டி பேசும் வசனங்களும் கூட ஓரளவு ஸ்டாலினை நினைவு படுத்துகிறது
எல்லாவற்றிலும் பார்க்க கடந்த காலங்களில் திரு ஸ்டாலின் மக்களை சந்தித்து குறை கேட்பு கூட்டங்களை நடத்தியதும் அதில் சாதாரண மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய மரியாதையும் கவனமும் உண்டு என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது என்ற செய்தியை இந்த திரைப்படம் உள்வாங்கி இருக்கிறது என்று கருதுகிறேன்
சாதாரண மக்களின் மனதில் கடைக்கால்  சந்திரன் (மம்மூட்டி) இடம்பிடித்த நிகழ்வுகளும் திரு ஸ்டாலினை நினைவு படுத்துகிறது போலவே உள்ளது.
மாமூட்டியை சுற்றி கமெரா சுழலும் போது பல காட்சிகளில் மறைமுகமாக திரு ஸ்டாலின்தான் தெரிகிறார்.
இந்த படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை . சிந்தனைக்கு சரியான வாய்ப்புக்களை பல காட்சிகள் வழங்கி இருக்கிறது.
ஒரே ஒரு தெரு கலவர காட்சி வருகிறது  ஆனாலும் அதில் கூட ரத்தம் சொட்ட சொட்ட கத்தி கொண்டு வெறிகொண்டு தாக்கும் காட்சிகள் இல்லை .
அந்த தெருக்கலவர காட்சியின் போது இது எனக்கானது அல்ல என்று கூறாமல் கூறிக்கொண்டு மம்மூட்டி மெதுவாக தெருவோரம் நடந்து செல்கிறார்
ஒரு முதலமைச்சர் தங்கள் கண்முன்னே எந்த பந்தாவும் இல்லாமல் நடந்து செல்கிறார் .தெருவோரம் அவரை காணும் மக்கள் முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள்
முதல்வர் அவர்களுக்கு மிக நெருக்கமாக கையசைத்து சிரித்துக் கொண்டே நடப்பதுவும் . ஒரு சாதாரண உணவகத்தில் மக்களோடு மக்களாக இருந்து உணவு அருந்துவதும் எப்படி பார்த்தாலும் திரு ஸ்டாலினின் கூட்டங்களை நினைவு படுத்தும் விதமாகதான் இருக்கிறது
இன்னும் பல விடயங்ளை கூறலாம்  கதையின் தன்மை கூட ஸ்டாலினின் அரசியல் வரலாற்றையும் கோட்பாடுகளையும் ஆங்காங்கே தொட்டு செல்கிறது போலதான் தோன்றுகிறது
மொத்தத்தில் ஒன்னு ஒன திரைப்படம் காட்சிக்கு இனியது கருத்துக்கும் இனியது  கண்களை உறுத்தும் வன்முறையோ பாலியல் வக்கிரங்களோ இல்லாத நல்ல திரைப்படம்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக