திங்கள், 31 மே, 2021

சமஸ்கிருதம் ஒரு இரகசியக் குறியீடு- (Code) மொழி தான். ஜாவா, கோபால் போன்ற, கணினி குறியீடு ... பேசப்படவே இல்லை

 m.dailyhunt.in  : சமஸ்கிருதம் ஒரு மொழியா?  - சரவணா ராஜேந்திரன்
சமஸ்கிருதம் என்பது, இந்தோ - யூரோப்பியன் மொழிக் குடும்பத்தில், ஒரு மொழியாகக் கருதப்பட்டு வருகிறது. இதிலிருந்து தான் இந்தி போன்ற பல மொழிகள் தோன்றியதாகப் பல காலமாகச் சொல்லப்படுகிறது. இந்த மொழியைப் பற்றி, பலவிதமான முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. தற்போது சில இந்தோ - யூரோப்பியன் மொழியியலாளர்கள், 'சம்ஸ்கிருதம்' என்று ஒரு மொழியே எக்காலத்திலும் இருந்ததில்லை என்ற ஒரு கருத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் முன்வைக்கும் ஆய்வுக்குறிய கேள்விகள்:
எந்த ஒரு மொழியும் தோன்ற, ஒரு இனம் தேவை. இனமில்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக, ஜப்பானியர்கள், ஜப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள். அதுபோல் தமிழர் தமிழையும் ,செர்மானியர், செர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள். சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?

இரண்டாவதாக, எந்த ஒரு மொழியும், பேசப்பட்டால் தான் மொழியாகும். பேசப்படவில்லையென்றால், அது 'குறியீடு' (Code) எனப்படும். எந்த இயல்பான மொழியும், பேச்சில் முதலில் தொடங்கி, பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான், எழுத்து வடிவம் பெறமுடியும். பேச்சு நிலையையே தொடாத எந்த ஒரு இயல் மொழியும், எழுத்து வடிவாகி, ஒரு இலக்கியம் ஆக முடியவே முடியாது!



சமஸ்கிருதம் என்ற மொழி, எந்தக் கால கட்டத்திலும் பேசப்பட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை. அப்படி அது பேசப்பட்டிருந்தால் , இப்போது சமஸ்கிருதத்திற்காக உயிரையே விடத் தயாராக இருக்கும் ஒரு சிறு வகுப்பினராவது இன்னும் அதைப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படியும் யாரும் இல்லை.

பார்ப்பனர்கள் இப்போது சமஸ்கிருதம் பேசுவதில்லை. இந்தியாவின் தற்போதைய பார்ப்பன மக்கள் தொகை சுமார் 5% என்று சொல்லப்படுகிறது. இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம்.

இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால், அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அப்படியென்றால், ஏன் தற்போது 10,000 மக்கள் கூட பேசவில்லை. அவ்வாறு பேசுகிறார்கள் என்று சொல்லப்படும் தரவுகள் கூட, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகப் பேசும் சில முக்கிய புள்ளிகளின் அழுத்தத்தால், ஊடகத்தின் மூலம் வெளிவரும் போலியான தகவல்களே அன்றி, உண்மையில்லை.

சமஸ்கிருதம் பேசப்படும் ஊர் என்று கருத்தப்படும் கர்நாடகாவில் உள்ள மத்தூரில் சாதாரணமாக தெருக்களில், கன்னடமும், துளுவும் தான் பேசிக்கொள்கிறார்கள். வீடுகளில் கன்னடத் தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டு இருக்கிறது, முன்வராண்டாவில் ஆங்கிலம், கன்னட மொழி நாளிதழ், வார, மாத இதழ்கள் தான் தென்படுகின்றன. எங்கும் சமஸ்கிருதம் காணவில்லை.

ஒருவேளை அழிந்து போன பல்லாயிரம் மொழிகள் போல, சமஸ்கிருத மொழி அழிந்து விட்டது என்று சொன்னால், பேசிக் கொண்டிருக்கும் எந்த மொழியும், நேராக அழிவதில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொள்வோம்.

முதலில் அதைப் பேசும் மக்கள் அழிய வேண்டும். அப்போது தான் அவர்கள் பேசும் மொழி அழியத் தொடங்கும். அது முதலில் 'அழிவின் விளிம்பு மொழியாக' (Endangered language) மாறி, சில ஆயிரம் மக்கள் பேசும் மொழியாகி, பின்னர் சில 100 மக்கள் பேசும் மொழியாகி, பின்னர் ஒரு குடும்பம் பேசும் மொழியாகி, கடைசியில் ஒருவர் பேசும் மொழியாகி, இறுதியில் முற்றிலும் அழிந்து போகும். எடுத்துக்காட்டாக, பிரேசிலில் 'வாரிக்கென' என்ற மொழி, இப்போது 20 பேர் தான் பேசுகிறார்கள். இந்த 20 பேரின் காலத்திற்குப் பிறகு, அது அழிந்து போகும்.

சமஸ்கிருதம், இவ்வாறாக அழிவின் விளிம்பு மொழியாக, எந்தக் கால கட்டத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்ததே இல்லை என்பதை விளிம்பு நிலை மொழிப் பட்டியல் உறுதி செய்கிறது. ஏனென்றால், சமஸ்கிருதம் எப்போதுமே பேசப்பட்டதே இல்லை என்பதால் தான்.

சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி என்று சொல்லப்படுவதால், அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால், அதைப் பேசியவர்கள் ஒரு போதும் அதை நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை! வீட்டிலாவது பேசிக்கொண்டிருப்பார்கள்.

மூன்றாவதாக, மொழி என்றால் அது 'தாய்' பேசும் மொழியாகக் கட்டாயம் இருக்கவேண்டும்.

அதனால் தான் 'தாய் மொழி' என அழைக்கப்படுகிறது. இந்து மத விதிகளின் படி, 'பெண்கள்', அதாவது தாய்மார்கள் சமஸ்கிருதம் பேச அனுமதி இல்லை. ஆக, சமஸ்கிருதம் 'தாய் மொழி'யாக வாய்ப்பே இல்லை.

எந்த மொழியும், ஆண், பெண் இருவரும் பேச உரிமை உள்ளதாகத்தான் இருக்கும்.

ஆனால், சமஸ்கிருதம் பேச பெண்களுக்குத் தடையுள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே!

ஆக, பெண்களிடம் பேச முடியாத, பெண்கள் பேச முடியாத ஒரு மொழி, பேச்சு மொழியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால், சமஸ்கிருதம் என்பது பேசப்படாத மொழி என்பது தெளிவாகிறது. பேசப்படாதது எக்காலத்திலும் மொழி ஆகாது.

ஆனால், எழுதப்படாதது மொழி ஆகலாம். பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும், எழுத்துகள் இன்றி உள்ளன.

இதனடிப்படையில் சமஸ்கிருதம் என்பது ஓர் இயல்பு மொழி அல்ல. அப்படியென்றால் அது தான் என்ன?

சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு இரகசியக் குறியீடு (Code) மொழி தான். ஜாவா, கோபால் போன்ற, கணினி குறியீடு மொழி போல! அது பேசும்மொழி அல்ல. குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் புரியும் இரகசியக் குறியீட்டு மொழி ஆகும். அந்த குறியீட்டு மொழியில் பல இலக்கியங்களையும், படைப்புகளையும், தகவல்களையும் ஒரு சாராருக்கு மட்டும் புரியும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அடுத்தது பேசப்படாத ஒரு மொழி, பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பேசப்படாத மொழி எதுவும் பேசப்படும் மொழிகளுக்குத் தாயாக ஆக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை! ஏனென்றால், பேசப்படாத மொழி பரவ ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதால் தான்.

பேசப்படாத ஒரு மொழி, சொற்களைப் பிறப்பிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி! முடியாது என்பது தெளிவு! பேச்சு வழியாகத்தான் சொற்கள் தோன்ற முடியும், பேச்சு வழியாகத் தோன்றிய சொற்கள் தான், பின்னர் எழுத்து வடிவில் வரும் என்பதும் உண்மை.

சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல், சமஸ்கிருதச் சொற்களை யார் உண்டாக்குவார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது! சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல், சமஸ்கிருதச் சொற்களை மற்ற மொழி பேசுபவர்கள் தான் உருவாக்கியிருக்க முடியும் என்பது தெளிவு. தமிழ், இந்திய தீபகற்பத்தில் முதன்மை மற்றும் பரவலாக பேசும் பழமை வாய்ந்த மொழி ஆகும், இதற்குச் சான்றுகள் கூறத்தேவையில்லை. அனைத்தும் பொதுவெளியில் உள்ளது. இதனடிப்படையில், சமஸ்கிருதச் சொற்களை அப்போது இங்கே வந்த ஆரியர்கள் தமிழில் இருந்து உருவாக்கியிருக்கக் கூடும்.

மேற்கூறிய காரணங்களால், சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மையல்ல என்பது தெளிவாகிறது!

இந்தோ - யூரோப்பியன் மொழியியலாளர்கள் இந்தக் கருத்துகளை ஹார்வர்ட் பல்கலைக்கழக மொழியிருக்கைக்குச் சமர்ப்பிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை மறுத்து இது வரை எந்த சமஸ்கிருத வல்லுனரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

இங்கு ஒரு பெரிய கேள்வி எழும்! அது என்னவென்றால், பவுத்தம் மற்றும் சமண மத நூல்கள் பல சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளதே? உண்மையில், பவுத்த, சமண மதங்கள் தோற்றுவிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் வரை, அது பாலி போன்ற தொன்மை மொழி மற்றும் கடி(கரி)போலி, மகதம் போன்ற பேச்சு மொழிகளில் தான் கருத்துகள் எழுதப்பட்டு, பரப்பி வந்தது. பவுத்த மதத்துறவிகள் பெரும்பாலானோர், சமஸ்கிருதத்தை முழுமையாக பவுத்த நூல்கள் எழுதப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. நாலந்தா மற்றும் தட்சசீல பல்கலைக்கழகங்களில், பெரும்பாலும் பாலிமொழி நூல்கள்தான் அதிகம் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால், பவுத்த நூல்களை சமஸ்கிருத மொழிக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட காலம் கி.பி. 150 ஆகும் இதை துவக்கி வைத்தவர் நாகர்ஜுனா என்ற பார்ப்பனர்.நாகர்ஜுனா, பவுத்தத்தை ஏற்பது போல் ஏற்றுக்கொண்டு, அதைச் சனாதன விதிகளுக்குள் கொண்டு வந்து சிலை வழிபாடு, பூஜை வசூல் போன்றவற்றைக் கட்டி எழுப்பி, பவுத்தைதைச் சிதைத்தது மட்டுமல்லாமல், அதுவரை பாலி மொழியில் எழுதப்பட்டு வந்த பவுத்த நூல்களை, சங்கேத வார்த்தைகளாக சமஸ்கிருதத்தில் எழுதத் துவங்கினார், இது குறித்து அவரது சுயசரிதையிலேயே உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் வசித்த ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பாலி அல்லது பௌத்த கலப்பு சமஸ்கிருதம் உபயோகிக்காமல், தூய சமஸ்கிருதத்தை தமது நூல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவரது காலத்திற்குப் பிறகுதான், இந்தியாவில் பவுத்தம் அழியத் துவங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும், பவுத்தம் அதிகம் எழுதப்பட்ட பாலிமொழி, இன்று வங்கம் மற்றும் பர்மியம், தாய்லாந்து மொழியாக இன்று உருபெற்று விளங்குகிறது!

ஆனால் சமஸ்கிருதம், என்ன ஆயிற்று? சொல்லித் தெரியவேண்டியதில்லை.
Dailyhunt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக