வியாழன், 13 மே, 2021

மேற்கு வங்காளம்: இரண்டு பா.ஜனதா எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்

மேற்கு வங்காளம்: இரண்டு பா.ஜனதா எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்
ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள்
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்காள சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கொரோனா தொற்று ஒருபக்கம் தலைவிரித்தாட மறுபக்கம் மக்கள் வாக்களித்தனர். மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பா.ஜனதா 70-க்கும் மேற்பட்ட இடத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த பா.ஜனதாவின் ஜெகனாத் சர்கார், நிசித் பிரமானிக் ஆகியோர் முறையே சாந்திபூர், தின்ஹட்டா ஆகியோர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டனர்
ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால், இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை இன்று சபாநாயகர் பிமான் பானர்ஜியிடம் வழங்கினர்.
ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள்

அதன்பின் ‘‘கட்சியின் முடிவை நாங்கள் பின்பற்றினோம். நாங்கள் எங்களுடைய எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது’’ நிசித் தெரிவித்தார்.

ஏற்கனவே 294 தொகுதிகளில இரண்டு இடங்களில் வேட்பாளர் மறைவு காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. தற்போது இருவர் ராஜினாமா செய்துள்ளதால், நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக