ஞாயிறு, 16 மே, 2021

ஆக்சிஜன் - தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள் .. பட்டியல்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொழில்சாலையின் கதவும் தட்டப்படுகிறது, மூடிகிடக்கும் ப்ளாண்டுகள் பூட்டு உடைக்கப்படுகிறது, ஓய்வில் சென்ற நிபுணர்கள் திரும்ப அழைக்கப்படுகிறார்கள் . He is asking only two questions, Can you make oxygen here ? .( உங்களால் இங்கு ஆக்ஸிஜன் தயாரிக்க முடியுமா) How long you need?. ( எவ்வளவு நாட்கள் தேவைப்படும்)
May be an image of indoor

A Sivakumar  :    மேற்கு வங்கம் துர்காபூரிலிருந்து ரயில் மூலம் 80 டன் திரவ ஆக்சிஜன் சென்னைக்கு வந்தது.
♦ ஸ்டெர்லைட் ஆலையில் 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம், சிறு கோளாறால் 3 நாட்கள் இடைநிறுத்தம்.
♦ நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக, 20 MT கொள்ளளவு திறன் கொண்ட 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள் (Cryogenic Containers) மூலமாக, திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.
♦ சீனாவிலிருந்து 12 கண்டெய்னர்களில் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கு் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது
♦ ஜொ்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் வாங்கப்பட்ட 900 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்கள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


♦ சிங்கப்பூரிலிருந்து 1,900 காலி சிலிண்டர்கள் வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதியுள்ள ​1,400 சிலிண்டர்கள் கப்பல் மூலமாக 20ம் தேதி சென்னைக்கு வரக்கூடும்.
♦ தமிழகத் தொழில் நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரம் காலி சிலிண்டர்களைப் பெறுவதற்கு சிப்காட் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போதுவரை 1,500 சிலிணட்ர்கள் பெறப்பட்டுள்ளன.
♦ ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவது தொடர்பாக,  திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளிலும், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மூடிக்கிடக்கும் ஆக்ஸிஜன் ஆலையிலும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு.
♦ தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீர்க்கப்படும்
- அமைச்சர் தங்கம் தென்னரசு
இதையெல்லாம் படித்து மகிழ்பவர்களுக்கு இரண்டு கேள்விகள்...
1) சென்ற அதிமுக ஆட்சின் தொழிற்துறை அமைச்சர் யார்?
2) கொரோனா அலை - 1, இதில் அவரின் பங்களிப்பு என்ன?May be an image of outdoors

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக